சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

காசு தான் முக்கியம்னு டார்ச்சர் செய்த அம்மா.. காதலனுடன் சீரியல் நடிகை செய்த லீலை

Gossip: பார்ப்பதற்கு ஹோம்லி லுக்கில் அழகுடன் இருக்கும் சீரியல் நடிகை ஒருவர், சில தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். அதோடு இன்ஸ்டாகிராமிலும் அவர் போடும் ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. ஆனால் அந்த நடிகைக்கு நடிப்பதில் ஒன்றும் பெருசா இன்ரஸ்ட் இல்லை, ஆனா அவருடைய அம்மாவின் வற்புறுத்ததால்தான் நடிகை, சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.

நாடகங்களில் பெரும்பாலும் குடும்ப பாங்கான கேரக்டர்களில் தங்கையாகவும் கல்லூரி மாணவியாகவும் நடித்து வந்தார். அந்த சமயத்தில் பக்கத்து தெருவில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் படிக்கும் காலத்தில் இருந்தே நடிகையை சுற்றி சுற்றி வந்தார். அவரும் பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருந்ததால் நடிகையும் அவ்வப்போது சைட் அடித்திருக்கிறார்.

பின்பு நடிகை சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு, அந்த நபரும் ஐடி துறையில் கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின்பு அம்மாவிற்காக தான் நடிக்க சென்ற நடிகை, இனிமேல் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

Also Read: நடிகையை காதலித்து கழட்டிவிட்ட பிரபலத்தின் மகன்.. செல்வாக்கை பயன்படுத்தி கேசை முடித்த பெரும்புள்ளி

பணப் பேயாகவே மாறிய சீரியல் நடிகையின் அம்மா

ஆனால் அவருடைய அம்மாவோ சீரியல் நடிகையின் காதலுக்கு வில்லியாக மாறினார். ‘இப்பதான் சீரியலில் நடிக்கிறாய்! இனி அடுத்தடுத்து சினிமாவில் நடிப்பதற்கு உனக்கு வாய்ப்பு வரும். இந்த சமயத்தில் காதல் கத்தரிக்காய் என்று வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதே!’ என்று நடிகையின் அம்மா அவரை காதலனுடன் இருந்து பிரிக்க பார்த்தார்.

அதேபோல் தான் அந்தப் பையன் வீட்டிலும் நடிகையை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இதனால் பண பேயாக இருந்த தன்னுடைய அம்மாவிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக நடிகை தன்னுடைய காதலனுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார். இது தெரிந்ததும் இரு வீட்டாரும் சண்டை போட்டுக் கொண்டனர், ஆனா அந்த காதல் ஜோடி கல்யாணம் செஞ்சுகிட்டு ஹனிமூனில் ஜாலியாக இருக்கின்றனர். இனி அந்த நடிகை நடிக்க போவதில்லை, பாவம் அவருடைய அம்மா தான் இனி சோத்துக்கு சிங்கி அடிக்கணும்.

Also Read: டேட்டிங் செய்து நைசாக காதலியை கழட்டி விட்ட நடிகர்.. வில்லியாக மாறி பழிவாங்கும் ஹீரோயின்

Trending News