திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மகனைக் காப்பாற்ற திட்டமிட்டு அந்தரங்க கேசில் மாட்டிவிட்ட அம்மா.. சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட அவமானம்

90களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் துணை நடிகையாக நடித்த நடிகை இவர். நடிப்புத் துறை மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பல படங்களில் நடிகைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போனதால் சின்னத்திரை பக்கம் வந்து சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வாட்ட சாட்டமான உடல்வாகு, வசீகரமான முகம் என இருக்கும் இந்த நடிகைக்கு சீரியலில் நிறைய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. நிறைய நெகட்டிவ் ரோல் மற்றும் போலீஸ் ரோல்களில் இவர் நடித்திருக்கிறார். சின்னத்திரை சீரியலாக இருந்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பால் அங்கேயும் முன்னணி நடிகையானார்.

Also Read:அம்மாவே அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அனுப்பி வைத்த கொடுமை.. நரகமாக மாறிய நடிகையின் வாழ்க்கை

இந்த நடிகை சின்னத்திரையில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென அந்தரங்க தொழில் செய்தார் என்று சொல்லி கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்குப் பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை சினிமா இரண்டுமே இவரை மொத்தமாக கைவிட்டு விட்டது. பல வருடங்களாக ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விட்டார் இந்த நடிகை.

உண்மையில் இந்த நடிகைக்கு அரசியல் பிரபலம் ஒருவரின் மகனுடன் நெருக்கமான உறவு இருந்திருக்கிறது. அவர் எவ்வளவு சொல்லியும் மகன் கேட்காததால் கோபமடைந்த அந்த அரசியல் பிரபலம் நடிகையை பழி வாங்குவதற்காக இப்படி ஒரு வழக்கில் அவரை உள்ளே தள்ளி, இருக்கும் இடம் தெரியாமல் ஒதுக்கி இருக்கிறார்.

Also Read:அந்தரங்க இடத்தில் பிரச்சனையால் கண்டம் விட்டு கண்டம் தாண்டிய நடிகர்.. பல நடிகைகள் விட்ட சாபம்

இருந்தாலும் இந்த நடிகை இந்த வழக்கை சட்டரீதியாக கையாண்டு, தான் ஒரு நிரபராதி என நிரூபித்து வெளியேயும் வந்து விட்டார். ஆனாலும் இன்று வரை இது போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட நடிகைகளின் லிஸ்டில் இவரின் பெயரும் இருப்பதுதான் ரொம்பவே பரிதாபமான ஒரு விஷயம். பல மீடியாக்களின் முன்பு இந்த நடிகை தன்னிலை விளக்கம் கொடுத்தாலும் பெயர் கெட்டுப் போனது அப்படியே இருந்து விட்டது.

பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுத்து கிடைக்கும் கேரக்டர்களில் நடித்து வரும் இந்த நடிகை, டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் தன்னுடைய வேலையை தொடர்கிறார். இவர் இன்னும் திருமணமும் செய்து கொள்ளவில்லை. சமீப காலமாக பல யூடியூப் சேனல்களில் தன்னுடைய சினிமா அனுபவத்தை பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார் இந்த நடிகை.

Also Read:ஊசி போட்டு பளபளன்னு ஆகி, ஹீரோக்களை மடியில் விழ வைத்த நடிகை.. கடைசியில் பட்டா போட்ட தொழிலதிபர்

Trending News