சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

5 வருஷமா சாவடிச்சுட்டாங்க, செம போர்.. டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருந்த சீரியலை கழுவி கழுவி ஊற்றிய கதாநாயகன்

திரை துறையை பொறுத்தவரையில் வெள்ளி திரைக்கு ரசிகர் கூட்டம் இருப்பது போல், அனுதினமும் குடும்பத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் சின்னத்திரைக்கு என்று பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. அப்படி பிரபல சேனலில் ஒளிபரப்பான சீரியலின் கதாநாயகனே ஏன் தான் இந்த சீரியலில் நடித்தோம் என்று நொந்து போய் பேசியுள்ளார். 

அதுவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சின்னத்திரை சீரியல்கள் ஆனது பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு சீரியல்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அதிலும் சீரியலில் வரக்கூடிய ரொமான்ஸ் காட்சிக்காகவே எக்கச்சக்க ரசிகர்கள் இருந்தனர். 

Also Read: விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலத்தை பணத்தை கொடுத்து மயக்கி ஜீ தமிழ்.. இவர் போவார்னு எதிர்பார்க்கல!

மேலும் ஐந்து வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த சீரியல் தான் ரோஜா.இந்நிலையில் சீரியலின் கதாநாயகனாக நடித்தவர் தான் சிபு சூரியன். இவர் தற்பொழுது ஐந்து வருடமாக ஒரே  சீரியலில் அதே கேரக்டரில் தான் நடித்து வந்தது தனக்கே பிடிக்கவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதுவும் இவர் இந்த சீரியலில் அர்ஜுன் சாராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ஆனால் சீரியலில் ஐந்து வருடமாக அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் இருந்தது என கூறியுள்ளார். கொலை மிரட்டல், கடத்தல் சீன், கண்டுபிடிப்பு, சேசிங் என இதுபோன்ற சீன்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆனால் எனக்கு கொஞ்சம் கூட இதுபோன்ற சீன்களில் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Also Read: காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

இதனைத் தொடர்ந்து இந்த சீரியலில் சிபு சூரியன் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்திலும், பிரியங்கா நல்காரி ரோஜா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ரசிகர்களின் ஃபேவரட் ஜோடியாக வலம் வந்தனர். ரோஜா சீரியலில் அர்ஜுன் சாருக்காகவே அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையிலும் சீரியலை விட்டு சிபு வெளியேறுவதாக இரண்டு முறை அறிவித்திருந்தார். ஆனால் சீரியலில் இருந்து விலகாமல் தனது பங்களிப்பை முழுவதுமாக கொடுத்துள்ளார்.

ஆனால் ரோஜா சீரியல் முடிந்த பிறகு  சீரியல்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு திரைப்படங்களில் மட்டுமே கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். தற்பொழுது இயக்குனர் பிரவீன், சிபு-விடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதுவும் டி ஆர் பி-யில் டாப் லிஸ்டில் இருந்த ரோஜா சீரியலை கதாநாயகனே இப்படி கழுவி கழுவி ஊற்றி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது  இருக்கிறது.

Also Read: டிஆர்பியில் அடித்து துவம்சம் பண்ணும் எதிர்நீச்சல்.. இந்த சீரியலுக்கு முதுகெலும்பாக இருக்கும் பிரபலங்கள்

Trending News