Vijay tv is like Sun tv: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டோம். அந்த அளவிற்கு அனைவரையும் கவர்ந்த ஒரு சீரியல். ஆனால் அப்படிப்பட்ட சீரியல் தொடர்ந்து மக்களை திருப்தி படுத்த முடியாததால் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபட்டுவிட்டது. இதனால் தன்னுடைய சேனலுக்கு பெரிய நஷ்டம் என்று சன் டிவி சேனல் கொடுத்த நெருக்கடியால் எதிர்நீச்சல் டீம் மொத்தத்தையும் காலி பண்ணும் விதமாக நாடகத்தை முடித்து விட்டார்கள்.
அதுவும் கிளைமாக்ஸ் கூட சரியாக கொண்டு வர முடியாத அளவிற்கு அவசர அவசரமாக கொண்டு போய் முடித்தார்கள். இதனால் ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்து எதிர்நீச்சலை மிஸ் பண்ணி விட்டோம் என்று புலம்பித் தவித்தார்கள். தற்போது இதே மாதிரி இன்னொரு சீரியலுக்கும் நிலைமை வந்திருக்கிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பல சீரியல்களில் ஒரு சில சீரியல்கள் மட்டும் என்ன ஆனாலும் பார்க்க தவற மாட்டோம்.
கெடுவைத்த விஜய் டிவி
அந்த வகையில் மோதலும் காதலும் என்ற சீரியல் மக்களின் ஃபேவரிட் நாடகமாக இடம் பிடித்தது. இந்த கதை ஏற்கனவே வந்த கல்யாண முதல் காதல் வரை என்ற நாடகத்தின் காபி கதையாக இருந்தாலும் இப்பொழுது நடித்து வரும் விக்ரம் வேதா நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் மக்களை கவர்ந்தது. நாடகத்திலும் எந்தவித குறை சொல்ல முடியாது அளவிற்கு போய்க் கொண்டிருந்தது.
ஆனால் சில மாதங்களுக்கு முன் நாடகத்தின் நேரத்தை மாற்றியதால் கொஞ்சம் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபட்டுவிட்டது. இதனால் இந்த நாடகம் தேவையில்லை என்று விஜய் டிவி சேனல் முடிவு பண்ணி விட்டது. அந்த வகையில் மோதலும் காதலும் குழுவிடம் சென்று இந்த நாடகத்தை சீக்கிரமாக முடித்து விடுங்கள் என்று கெடுவைத்து விட்டார்கள்.
அதன்படி இந்த வாரத்துடன் கிளைமாக்ஸ் கொண்டுவரும் வேளையில் அவசர அவசரமாக கதையை நோக்கி பயணித்து வருகிறார்கள். அதனால் தன்வியின் அம்மாவாக நடித்து வந்த மிர்லானியை கொன்று விட்டு அந்தப் பழியை விக்ரம் மீது போட்டு விட்டார்கள். ஆனால் மிர்லானியை கொன்னது யார் என்று வேதாவிற்கு தெரிந்ததால் விக்ரமே காப்பாற்றி மிர்லானியின் கணவரை ஜெயிலுக்கு அனுப்பப் போகிறார்.
இருந்தாலும் மிர்லாணியை ஏன் அவர் கொலை செய்திருக்க வேண்டும், அந்த பலி விக்ரம் மீது போட்டு தேவையில்லாமல் பல சொதப்பல்களை கொண்டு ஏன் நாடகத்தை முடிக்க வேண்டும் என்று பல கேள்விகள் எழுந்து வருகிறது. ஒரு கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அதற்கான நேரத்தை கொஞ்சமாவது கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால் சேனல் தரப்பில் இருந்து அந்த நெருக்கடியின் காரணமாக ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் முடிவை நோக்கி பயணித்து வருகிறது மோதலும் காதலும் சீரியல். இதற்கு பதிலாக எத்தனையோ நாடகங்கள் தேவை இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் ஒரு எண்டு கார்டு போடாமல் இதை ஏன் முடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
முடிவுக்கு வந்த எதிர்நீச்சலின் சம்பவங்கள்
- அவசரத்தால் எதிர்நீச்சலில் கோட்டை விட்ட ஜீவானந்தம்
- மாறன் பேச்சை கேட்டதால் எதிர்நீச்சல் சீரியலில் ஏற்பட்ட குளறுபடிகள்..
- கதை சொதப்பியதால், அதிரடி காட்டும் ஜீவானந்தம்