Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், அம்மாவின் பிறந்தநாளுக்கு நான் ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று இனியா, ஆகாஷிடம் சொல்கிறார். அதற்காக பாக்யாவிற்கு பிடித்த நபர்களிடம் இரண்டு வரிகள் அம்மாவை பற்றி கேட்டு ஒரு வீடியோவை ரெடி பண்ணி சர்ப்ரைஸ் பண்ண போகிறேன் என்று சொல்கிறார். அதனால் நீ செல்வி ஆண்டியிடம் ஒரு வீடியோவை எடுத்து எனக்கு அனுப்பி கொடு என்று கேட்கிறார்.
அதற்கு ஆகாசும் சரி என்று சொல்லிய நிலையில் இனிய கேட்டுக்கொண்டபடி எடிட்டிங் பண்ணி கொடுக்க தயாராகி விட்டார். அடுத்ததாக பாக்யாவின் பிறந்தநாளுக்கு நடுராத்திரியில் சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்பதற்காக செழியன் மற்றும் எழில் வீட்டிற்கு வருகிறார்கள். அப்பொழுது இனியா யாருக்கும் தெரியாமல் கதவை திறந்து விட்டு பாக்கியவை எழுப்பி பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி கேக் கட் பண்ணி சந்தோஷப்படுத்தி விடுகிறார்கள்.
இதில் கோபியும் கலந்து கொண்டு பாக்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிறார். பிறகு மறுநாள் பாக்கியா கிளம்பி ஹோட்டலுக்கு போய்விடுகிறார். அங்கே அனைத்து ஏற்பாடுகளும் பண்ணிய நிலையில் பாக்கியா கூப்பிட்ட அனைவர்களும் வந்து பாக்யாவிற்கு கிப்ட் கொடுக்கிறார்கள். அதே நேரத்தில் கோபியும் ஒரு கிப்ட் வாங்கி கொடுக்கிறார்.
அங்கே ராதிகாவும் வந்து பாக்கியாவின் பிறந்த நாளில் கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து ஒரு காலத்தில் என்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்கு யாரும் இல்லை அதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும் யாரும் தயாராகவில்லை. ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு நாம் நினைத்தபடி நம் வாழ்க்கையை கொண்டு வந்து விட்டால் எல்லாம் நமக்கு கிடைத்துவிடும் என்பதற்கு நான் தான் முன் உதாரணம்.
அதனால் ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆசையை சொந்தக்காலில் நிறைவேற்ற வேண்டும் என்று பாக்யா அவருடைய அட்வைஸை கொடுக்கிறார். இப்படி பாக்கியா பேசும் பொழுது கோபிக்கு உறுத்தலாக இருக்கிறது. அடுத்ததாக ஈஸ்வரி, பாக்யாவிற்கு கொடுக்கும் இன்ப அதிர்ச்சியாக கோபியுடன் மறுபடியும் பாக்யாவுக்கு கல்யாணம் நடக்கப் போகிறது என்ற விஷயத்தை போட்டு உடைக்கிறார்.
இதை எதிர்பார்க்காத பாக்கிய அதிர்ச்சியாகி நிலையில் ராதிகாவும் இதை கேட்டு அதிர்ச்சடைய போகிறார். தான் விவாகரத்து வாங்கிய நிலையில் கோபி எடுத்து இருக்கும் இந்த முடிவு ராதிகாவிற்கு குழப்பம் ஆகிவிட்டது. என்னதான் இந்த முடிவை ஈஸ்வரி சொல்லி இருந்தாலும் கோபி அப்போதே தடுத்து நிறுத்தி இருந்தால் இந்த அளவிற்கு ஈஸ்வரி தைரியமாக பேசி இருக்க முடியாது.
அதனால் கோபியை பொருத்தவரை ஒன்று இல்லனா இன்னொன்னு என்பதற்கு ஏற்ப ராதிகா இல்லை என்றதும் பாக்யாவுடன் சரண் அடைவதற்கு தயாராகி விட்டார். கடைசி வரை கோபி சுயமாக முடிவெடுக்காமல் ஈஸ்வரி பேச்சைக் கேட்டுக் கொண்டு தற்குறியாக தான் இருக்கப் போகிறார்.