சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன்.. வெளியேறப் போவது யார்.? அதிர வைக்கும் பிக் பாஸ்

Biggboss 8: பிக்பாஸ் 8 நேற்று ஆரம்பித்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் முதல் எலிமினேஷன் என்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியை ஆரம்பத்திலேயே சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற விஜய் டிவியின் பிளான் தான் இது.

இதன் மூலம் டிஆர்பியை எகிற வைக்க புது யுக்தியை அவர்கள் கையாண்டுள்ளனர். ஆனால் இதுவே அவர்களுக்கு விமர்சனமாகவும் மாறி இருக்கிறது. அதன்படி தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் முதல் எலிமினேஷன் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்திற்குள் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற பிக்பாஸின் கட்டளை போட்டியாளர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது. அதற்குள் எப்படி ஒருவர் வீட்டிற்கு தேவையில்லாதவர் என கணிக்க முடியும் என அவர்கள் குழம்பி போய் இருக்கின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

ஆனாலும் தற்போது நாமினேஷன் தொடங்கி விட்டது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் ரீல் மகளான சாச்சனா வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக தற்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றது. இதுவே ஆடியன்சை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

வீட்டிற்குள் தேவையில்லாத ஆணியாக பலர் இருக்கும்போது எதற்காக ஆசை கனவுகளுடன் வந்த பெண்ணை வெளியில் அனுப்ப வேண்டும். இதற்கு கூப்பிடாமலேயே இருந்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இருந்தாலும் இதற்கு பின்னால் ஏதோ ஒரு திட்டம் இருக்கும் என தெரிகிறது. அவ்வளவு எளிதில் இவர் வெளியேறி விட மாட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் முதல் நாளிலேயே அர்னவ், தர்ஷிகா உள்ளிட்ட சிலர் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டின் முதல் எலிமினேஷன்

Trending News