வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பணத்துக்காக காவு வாங்கும் கொள்ளை கும்பல்.. வெற்றி துரைசாமி இறந்த சமயத்தில் பாக்யராஜ் வெளியிட்ட பகீர் வீடியோ

Vetri Duraisamy-Bhagyaraj: முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இயற்கை மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்த இவர் இமாச்சலப் பிரதேசத்திற்கு சென்றபோது விபத்து ஏற்பட்டு ஆற்றில் தவறி விழுந்து உயிர்நீத்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக அவரை மீட்க போராடிய காவல்துறையினர் இன்று சடலமாக கண்டெடுத்துள்ளனர். அங்கேயே போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட அவருடைய உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில் பாக்யராஜ் வெளியிட்ட ஒரு வீடியோவும் வைரலாகி வருகிறது.

நடிகர் பாக்யராஜ் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில் பல தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வருகிறார். அதில் நேற்று வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இப்படி கூட நடக்குமா? என அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது ஆற்றங்கரை ஓரங்களில் பணத்துக்காக உயிர் காவு வாங்கும் சில கும்பல்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Also read: வந்த வேகத்திலேயே கோடியில் புரளும் பிரியங்கா மோகன்.. பிரமிக்க வைக்கும் சொத்து மதிப்பு

அதன்படி மேட்டுப்பாளையம் அருகில் ஓடும் நதிக்கரையில் குளிக்கும் பல பேர் காணாமல் போய் விடுவார்கள். பின்னர் கண்டெடுக்கப்படும் அவர்கள் சுழலில் சிக்கி இறந்ததாக கூறுவது உண்டு. அப்படிப்பட்டவர்களை மீட்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. இறந்து போனவர்களின் தரப்பில் இருந்து அவர்களை ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி அனுப்புவார்கள்.

ஆனால் சில இடங்களுக்கு தங்களால் கூட செல்ல முடியாது என்று கூறும் அவர்களை எப்படியாவது சம்மதிக்க வைத்து அதிக பணம் கொடுத்து அனுப்புவார்களாம். உண்மையில் குளிக்க வருபவர்களை நீருக்குள் மூச்சு பிடிக்கும் திறமை கொண்ட கும்பல் காலை பிடித்து இழுத்து பாறை இடுக்குகளில் சொருகி விடுவார்களாம்.

பிறகு ஒன்றும் தெரியாதது போல் வேறு வழியில் வந்து நாங்கள் கண்டுபிடித்து தருகிறோம் என்று அதிக பணத்தை வாங்கிக்கொண்டு உடலை மீட்டுக் கொடுப்பார்களாம். இந்த தகவலை தான் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். உண்மையில் இதை கேட்கும் போதே மனது பதைபதைக்கிறது.

Also read: வெற்றி துரைசாமி மாதிரியே அதன் மீது அஜித்துக்கு இருந்த தீரா காதல்.. நண்பனுடன் வைரலாகும் புகைப்படங்கள்

பணத்துக்காக இப்படி அப்பாவி உயிர்களை காவு வாங்கும் இந்த கும்பல்கள் ஆற்றங்கரை மற்றும் மலைப்பகுதிகளில் சுற்றிக்கொண்டு தான் இருக்கின்றனர். அதனால் மக்கள் இதுபோன்ற இடங்களுக்கு தனிமையில் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போது வெற்றி துரைசாமியின் மரணம் நடந்துள்ள இந்த தருவாயில் பாக்யராஜ் பேசியுள்ள இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Trending News