செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அன்புன்னா என்ன தெரியுமா.? வாரிசு மேடையில் விஜய் சொன்ன குட்டி கதை

இன்று முழுவதுமே வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் பற்றிய விஷயங்கள் தான் வைரலாகி வருகிறது. நேற்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த அந்த நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இருந்த அத்தனை விஷயங்களும் தற்போது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதில் விஜய் ரசிகர்களுடன் உரையாடிய அனைத்து விஷயங்களும் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

வழக்கமாக இது போன்ற இசை வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டி கதை சொல்வார். அது ரசிகர்களை பெருமளவில் உற்சாகப்படுத்தும். அதேபோன்று இந்த முறையும் விஜய் என்ன மாதிரியான குட்டி கதையை சொல்லப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

Also read:  விஜய்க்கும், அஜித்துக்கும் இதுதான் வித்தியாசம்.. துணிவை உதாசீனப்படுத்தும் வாரிசு படக்குழு

அந்த வகையில் விஜய் அன்புன்னா என்ன என்று ஒரு குட்டி கதையின் மூலம் விளக்கினார். அதாவது ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை இருக்கிறார்கள். அதில் அண்ணன் தங்கை இருவருக்கும் அப்பா ஆளுக்கு ஒரு சாக்லேட் கொடுப்பார். தங்கை தன்னுடைய சாக்லேட்டை சாப்பிட்டு விட்டு அண்ணன் பள்ளிக்கு போகும் போது எடுத்து செல்வதற்காக வைத்திருக்கும் சாக்லேட்டையும் எடுத்து சாப்பிடுவார்.

இதுவே தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் தங்கை தன் அண்ணனிடம் அன்புன்னா என்ன என்று கேள்வி கேட்பார். அதற்கு அண்ணன் நீ என்னுடைய சாக்லேட்டை எடுத்து சாப்பிடுகிறாய் என்று தெரிந்தும் நான் அதே இடத்தில் சாக்லேட்டை வைப்பது தான் அன்பு என்று கூறுவார். இந்த கதையை சொன்ன விஜய் அனைவருக்கும் அன்பு கொடுங்கள் என்றும் கூறினார்.

Also read: ஒவ்வொரு பாடலும் வேற லெவல்.. இணையதளத்தை திணறடிக்கும் வாரிசு

மேலும் எனக்கு போட்டியாக ஒருவர் இருந்தார் என ஒரு கதையை பயங்கர சஸ்பென்ஸ் உடன் ஆரம்பித்து அது நான்தான் என்று அவர் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் வாரிசு படத்தில் நடித்த ஒவ்வொரு பிரபலங்கள் பற்றியும் அவர் மிகவும் உயர்வாக குறிப்பிட்டார். அதில் பிரகாஷ்ராஜ் வில்லனாக நடித்திருப்பதை பற்றியும் ரொம்பவும் சிலாகித்து பேசினார்.

இப்படி கலக்கலாக சென்ற ஆடியோ லான்ச் இன்று சோசியல் மீடியாவையே அதகளம் செய்து கொண்டிருக்கிறது. மேலும் விஜய் செல்ஃபி வீடியோ எடுத்து பதிவு செய்த நெஞ்சுக்குள் குடியிருக்கும் என்ற ஹேஷ்டாக்கும் இப்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில் இந்த ஆடியோ லான்ச் படத்திற்கான மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்துள்ளது. விரைவில் இந்த படத்தின் டிரைலரை காணவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also read: முழு எனர்ஜியுடன் வந்த விஜய்.. இனிமே இப்படித்தானாம், புது ஸ்டைலில் மேடையில் நடந்த சுவாரஸ்யம்

Trending News