புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கெட்ட கொழுப்பை நீக்கும் ஒரே ஒரு துவையல்.. ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில் இருக்கும் பிரண்டை

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய சில விஷயங்களை நாம் மெனக்கெடு செய்து வந்தால் இருக்கும் வரை உடம்பில் எந்த வலியும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். அதில் ஒன்றுதான் இந்த பிரண்டை. பொதுவாக இந்த பிரண்டை செடி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த செடி பெரும்பாலும் வீடுகளில் இருக்க வாய்ப்பே இல்லை. ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் வளரும் செடிதான் இந்த பிரண்டை.

ஆனால் இந்த பிரண்டை செடியில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது. ஆனால் இதை எப்படி எடுத்து சாப்பிடலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். அதாவது இந்தச் செடியை பறிக்கப் போனால் அதில் இருக்கும் இலைகள் மற்றும் பூக்களை எக்காரணத்தைக் கொண்டும் எடுத்து சாப்பிடக்கூடாது. நம்ம சாப்பிடக்கூடிய பகுதி எதுவென்று பார்த்தால் பிரண்டையில் இருக்கும் தண்டு பகுதி மட்டும் தான்.

பிரண்டையில் இருக்கும் அதிசயமான மகத்துவம்

அந்த தண்டு பகுதி என்பது நாலு பக்கத்தை சேர்ந்ததாக இருக்கும். இந்த தண்டு பகுதியை மட்டும் தான் நாம் சாப்பிட முடியும். ஆனால் இதை தொட்டுப் பறிப்பதால் ரொம்பவே அரிப்பு ஏற்படும். அதனால் கையில் உரை மாட்டிக் கொண்டு பறிக்க வேண்டும். அதிலும் கடைசி பகுதியில் இருக்கக்கூடிய முதல் தண்டு மற்றும் இரண்டாம் மட்டும் பறித்துக் கொண்டு சாப்பிட வேண்டும். அப்பொழுது அரிப்பு தன்மை கம்மியாக இருக்கும்.

அத்துடன் இதில் இருக்கும் கூர்மையான பகுதியை நீக்கிவிட்டு துவையல் பண்ண வேண்டும். அல்லது இதை பொடி பண்ணி கூட தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் ரொம்பவே நல்லது. இதை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கும் ஞாபக சக்தி பல மடங்காக இருக்கும் மூளை நரம்புகளும் பலப்படும். அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற அனைத்து செரிமான பிரச்சனைகளுக்கும் இந்த பிரண்டை துவையல் மிகச்சிறந்த மருந்தாகவும் பயனளிக்கும்.

அத்துடன் பிரண்டை துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். எலும்பு முறிவு ஏற்பட்டால் அல்லது உடைந்த எலும்புகளுக்கும் இந்த பிரண்டை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும். உடல் எடையை குறைக்காமல் கெட்ட கொழுப்பை குறைத்து விடும்.

தற்போது 30 வயதுக்கு மேல் இருக்கும் ஆண்கள் பெண்கள் மிகவும் அவஸ்தைப்படும் ஒரு விஷயம் மூட்டு வலி பிரச்சனை. அதற்கு மிகப்பெரிய தீர்வாக இந்த பிரண்டை உதவி செய்து வருகிறது. உடலில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க இயற்கை மூலிகைகளில் இருக்கும் அற்புதமான ஒரு விஷயம்தான் இந்த பிரண்டை.

உடல் ஆரோக்கியமாக இருக்க சில வழிமுறைகள்

Trending News