செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Baakiyalakshmi : மீசை நரைச்சாலும் ஆசை குறையாத கோபி.. பேத்தி பெயர் வைக்கும் விழாவில் நடக்கும் தரமான சம்பவம்

மீசை நரைச்சாலும் ஆசை குறையாது என்ற பழமொழிக்கு பக்கவாக பொருந்துகிறார் கோபி. அதாவது கோபிக்கு பேத்தி பிறந்து இருக்கும் நிலையில் அவருக்கு விமர்சையாக பெயர் சூட்டும் விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பாக்யா செய்து வருகிறார்.

கோபி, ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது அம்மாவிடம் சொல்ல முயற்சி செய்கிறார். அப்போது ஈஸ்வரிக்கு திடீரென ஒரு ஃபோன் கால் வந்து விடுகிறது. கோபி சொல்ல வரும்போது ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று தடுத்து விடுகிறது.

இந்நிலையில் இனியாவை காரில் அழைத்துச் செல்லும் கோபி உனக்கு தம்பி, தங்கச்சி இருந்தா நல்லா இருக்குமா என்று கேட்கிறார். எனக்கு தான் செழியன் அண்ணா ஓட பாப்பா இருக்கே, அதோட விளையாடுவேன் என்று கூறுகிறார்.

கோபி செய்ய போகும் தரமான சம்பவம்

என்னுடைய நண்பர் ஒருவனுக்கு 10 வயதில் தம்பி இருக்கிறான். அவன படிக்கவே விட மாட்டானா என்ற கூறுகிறார். இதே செம டார்ச்சர் என்று இனியா சொல்ல கோபி என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் பேத்தியின் பேர் வைக்கும் விழா தான் இதற்கு சரியான நேரம் என்று ஒட்டுமொத்த குடும்பம் முன்னிலையிலும் கோபி உண்மையை போட்டு உடைக்க உள்ளார். இதனால் மொத்த குடும்பமும் அசிங்கப்பட உள்ளது.

அதாவது பேத்தி எடுத்த வயதில் இப்போது கோபி அப்பாவாகிறார் என்பது வேடிக்கையாக உள்ளது. மேலும் ராதிகாவுக்கு கொஞ்சம் நெஞ்சம் இருந்த பெயரும் இப்போது கோபி வீட்டில் சுத்தமாகப் போக உள்ளது. அதுவும் குறிப்பாக இனியா தனது தந்தை மேல் மிகுந்த ஆத்திரமடைய இருக்கிறார்.

Trending News