வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கோலிவுட்ல அறிமுகமாகும் பிரபல இந்தி இயக்குனர்.. எல்லாம் நம்ம அட்லீ போட்ட பிள்ளையார் சுழி தான்

B’wood Director Tamil Debutant: தமிழ் சினிமாவில் ஜெயிக்கும் கலைஞர்களுக்கு அடுத்த கட்ட முயற்சி என்பது பாலிவுட்டை நோக்கிதான் இருக்கும். அந்த அளவுக்கு பாலிவுட் ஒரு பெரிய திரைகடலாக பார்க்கப்படுகிறது. இங்கு மிகப் பெரிய வெற்றியடைந்தவர்கள் கூட பாலிவுட்டிற்கு சென்றால் ஒரு சின்ன புள்ளியாகத்தான் தெரிவார்கள். இப்படி ஒரு சூழலில் பாலிவுட் இயக்குனர் ஒருவர் தமிழில் அறிமுகமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இந்தி திரை உலகில் பல ஃபிலிம் பார் விருதுகளையும், தேசிய விருதுகளையும் வென்ற இயக்குனர் அவர். திரைப்பட துறையில் இவருடைய பங்களிப்புக்காக பிரான்ஸ் அரசு இவருக்கு விருது வழங்கியது. பிளாக் ஃபிரைடே, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் என்ற படைப்புகளின் மூலம் பிரபல இயக்குனராக இருக்கும் அனுராக் காஷ்யப் தான் தமிழில் அறிமுகமாக இருக்கும் இயக்குனர்.

Also Read:1000 கோடி வசூலுக்குப் பின் மீண்டும் இணையும் அட்லி கூட்டணி.. 2200 கோடி பட்ஜெட்டில் கமிட்டான ஷாருக்கான்

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் ருத்ரா என்னும் வில்லன் கேரக்டரில் முதன் முதலில் தமிழில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் ஆசையில் சமீபத்தில் வெளியான லியோ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் அனுராக்.

தமிழில் அறிமுகமாக இருக்கும் பாலிவுட் இயக்குனர்

ஒரு இயக்குனராக மட்டுமில்லாமல் சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் பன்முகத் திறமை கொண்டவர் இவர். மும்பை வெடிகுண்டு சம்பவத்தை மையமாகக் கொண்டு பிளாக் பிரைடே என்னும் படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் நிறைய தேசிய விருதுகளை வாங்கியது, சர்ச்சைக்கு உள்ளானது.

படம் இயக்கி சம்பாதிப்பது என்பதை தாண்டி தன்னுடைய சோதனை முயற்சிகளை படங்களின் மூலம் பரிசோதித்துப் பார்ப்பவர் இவர். தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் தான் இவருடைய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பது. இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக எடுக்க இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் அனுராக் இயக்குனராக அறிமுகமாக இருப்பது விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. சமீபத்தில் தான் இயக்குனர் அட்லி இங்கிருந்து இந்தி சினிமாவுக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டி இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது பாலிவுட் உலகின் மிகப்பெரிய இயக்குனர் அனுராக் காஷ்யப் தமிழ் சினிமாவை நோக்கி வருகிறார்.

Also Read:முதல் நாளே உலக அளவில் வசூல் வேட்டையாடிய 6 படங்கள்.. பாலிவுட்டை கதிகலங்க செய்த அட்லி

Trending News