புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெற்றிமாறன் தயாரித்து வியாபாரம் ஆகாத 5 படங்கள்.. தயாரிப்பாளராய் தோற்ற இயக்குனர்

இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய சிறந்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனராக ஜெயித்த வெற்றிமாறனுக்கு தயாரிப்பாளராக சில படங்கள் கை கொடுக்கவில்லை.

உதயம் NH4: நடிகர் சித்தார்த் மற்றும் புதுமுகநாயகி அஷ்ரிதா செட்டி நடித்த திரைப்படம் உதயம்NH4. வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான மணிமாறன் இந்த படத்தை இயக்கினார். படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி தயாரித்தது வெற்றிமாறன். பல வருட போராட்டங்களுக்குப் பிறகு இந்த கதை படமாக்கப்பட்டது. வெற்றிமாறனுடன் இணைந்து தயாநிதி அழகிரி இந்த படத்தை தயாரித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Also Read:இந்த 2 முக்கிய காரணங்களால் விடுதலை பான் இந்தியா படமாக எடுக்கவில்லை.. தெனாவட்டான வெற்றி மாறன்

நான் ராஜாவாக போகிறேன்: இயக்குனர் ப்ரித்வி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நான் ராஜாவாகப் போகிறேன். இந்த படத்தில் நகுல் மற்றும் சாந்தினி நடித்திருந்தனர். படத்திற்கு திரைக்கதை எழுதியவர் வெற்றிமாறன். இந்த படத்தின் ரிலீசுக்கு நடிகர் தனுஷ் தன்னால் முடிந்த வரை உறுதுணையாக இருந்தார். ஆனால் இந்த படம் வந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.

பொறியாளன்: மீண்டும் தன்னுடைய நெருங்கிய நண்பர் மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரித்த திரைப்படம் தான் பொறியாளன். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் கயல் ஆனந்தி நடித்திருந்தனர். மேலும் வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தின் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு கிடைத்த வெற்றியைப் போல் படத்திற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.

Also Read:வெற்றி கொண்டாட்டத்தில் விடுதலை படக்குழு.. வெற்றிமாறன் செய்த காரியம்!

அண்ணனுக்கு ஜே: அட்டகத்தி தினேஷ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்த திரைப்படம் அண்ணனுக்கு ஜே. இந்த படத்தை புதுமுக இயக்குனர் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இன்றைய அரசியல் சூழ்நிலையை ரொம்பவும் நையாண்டியாக சொன்ன படம் இது. முதலில் இந்த படத்தை நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. பின்னர் வெற்றிமாறன் மட்டும் இந்த படத்தை தயாரித்தார்.

சங்கத்தலைவன்: இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் வெற்றிமாறன் தயாரித்த திரைப்படம் சங்கத் தலைவன். கருணாஸ், சமுத்திரகனி, ரம்யா சுப்ரமணியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சங்கத் தலைவன் திரைப்படம் நூற்பாலையில் பணிபுரிபவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

Also Read:விடுதலை பார்ட் 2-வில் ஹீரோ சூரி இல்ல.. கிளைமேக்ஸை வேற லெவலில் செதுக்கியிருக்கும் வெற்றிமாறன்

Trending News