ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சூர்யா பெயரில் வரும் மற்றொரு வாரிசு நடிகர்.. அப்பாவோட மார்க்கெட்டை குறைக்காம இருந்தா சரிதான்

ரஜினி, கமல் இருந்த காலத்தில் வந்த நடிகர் சிவகுமார். இவர் ரஜினி, கமல் போல் உச்சத்திற்கு செல்லவில்லை என்றாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம் தான். சிவகுமாரின் மூத்த வாரிசான சூர்யா சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்த சூர்யா படிப்படியாக இப்போது உயர்ந்துள்ளார்.

அதேபோல் சிவகுமாரின் இரண்டாவது வாரிசான கார்த்தியும் படங்களில் ஹீரோவாக வருகிறார். இப்போது சூர்யாவின் பெயரில் மற்றொரு வாரிசு நடிகர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். மேலும் அவரது அப்பாவே இப்போது பல மொழிகளில் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.

Also Read : ரோலக்ஸ் கௌரவத் தோற்றத்தில் நடித்து வெளிவந்த 8 படங்கள்.. த்ரிஷாவுடன் குத்தாட்டம் போட்ட சூர்யா 

அவரது மார்க்கெட்டை குறைக்க மகன் இப்போது வந்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்த விஜய் சேதுபதி இப்போது டாப் நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஹீரோ அந்தஸ்து கிடைத்தாலும் வில்லன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தயக்கம் இன்றி நடித்து வருகிறார்.

அந்த வகையில் இப்போது பாலிவுட்டில் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அவரது மகனும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகமானார்.

Also Read : லியோவை ஓரங்கட்டிய கங்குவா.. ட்விட்டரை ஆட்சி செய்த சூர்யா

அதன் பின்பு ஒரு சில படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் தலைகாட்டி சென்ற சூர்யா இப்போது பிரபல இயக்குனர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருக்கிறது. பாலிவுட்டில் தான் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.

இப்போது தமிழ் சினிமாவிலும் அது தொடர்ந்து வருகிறது. விஜய்யின் மகன் சஞ்சய், முரளியின் மகன் ஆகாஷ் போன்றவர்கள் நடிகராக அவதாரம் எடுக்க உள்ள நிலையில் இப்போது விஜய் சேதுபதியும் தனது மகனை ஹீரோவாக்கி பார்க்க ஆசைப்பட்டுள்ளார். மேலும் சூர்யாவால் விஜய் சேதுபதி மார்க்கெட் குறையாமல் இருக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

vetrimaran-vijay-sethupathi-surya

Also Read : தியேட்டரில் சோடைப்போன விஜய் சேதுபதி படம்.. சர்வதேச அளவில் படைக்கும் சாதனை

- Advertisement -

Trending News