வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஆறுதலுக்காக பழைய காதலனை தேடிச் சென்ற மகள்.. அதிரடி முடிவெடுத்த அப்பா

இந்த வருட ஆரம்பத்திலேயே பலரையும் உலுக்கிய செய்தி என்றால் அது சூப்பர் நடிகரின் வீட்டில் நடந்த விவாகரத்து சம்பவம் தான். பிரபல நடிகரை காதலித்து மணந்து கொண்ட நடிகரின் மகள் திடீரென தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது நடிகரை ரொம்பவே காயப்படுத்தியது.

பல மாதங்களாக இருவரையும் சேர்த்து வைக்க நடந்த போராட்டம் தற்போது நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. சமீபத்தில் சூப்பர் நடிகரின் வீட்டில் நடந்த மீட்டிங் அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து விட்டதாம். மகளும், மருமகனும் விவாகரத்து முடிவை கைவிட்டது சூப்பர் நடிகருக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுத்திருக்கிறது.

Also read:தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்.. மாலத்தீவில் கள்ளத்தனமாக நடிகையுடன் கூத்தடிக்கும் நடிகர்

ஆனால் திடீரென நடந்த இந்த மீட்டிங்கிற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. என்னவென்றால் இப்படி ஒரு முடிவை அறிவித்த பிறகு நடிகரின் மகள் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இது அவருக்கு மன ஆறுதலை கொடுக்கும் என்பதால் குடும்பத்தினரும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

ஆனால் சமீபகாலமாக மகள் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பியது நடிகரை ரொம்பவே அப்செட் செய்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் மேலாக பழைய காதலரை மகள் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி தான் அவரை பதற வைத்திருக்கிறது.

Also read:திருமணமான நடிகரை வளைக்க முயன்ற நடிகை.. மாஸ் நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டதால் வந்த வினை

வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் போது இப்படி எல்லாம் செய்தி பரவுவது நல்லதற்கில்லை என்று நினைத்த நடிகர் உடனடியாக ஒரு அவசர மீட்டிங்கை ஏற்பாடு செய்திருக்கிறார். மகளின் வாழ்வும், பேரக் குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடிகர் பெரும் முயற்சி செய்து இருக்கிறார்.

அதன் காரணமாகவே அந்த மீட்டிங்கில் அவர் அதிரடியான சில விஷயங்களையும் பேசி இருக்கிறார். அதன் பின்பு தான் மகளும், மருமகனும் இணைந்து வாழ்வதாக சம்மதம் கூறி இருக்கின்றனர். எப்படியோ நடிகர் அதிரடியாக ஒரு முடிவு எடுத்து இந்த பிரச்சனையை முடித்து வைத்து விட்டார் என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுத்து வருகின்றனர்.

Also read:அப்பாவை போல் மாசாக என்ட்ரி கொடுக்க துடிக்கும் வாரிசு.. ரகசியமாக நடந்து வரும் பயிற்சி

Trending News