தமிழ் சினிமாவில் சுந்தர் சி மற்றும் லாரன்ஸ் இருவரும் நகைச்சுவை கலந்த பேய் படங்களை எடுப்பதில் வல்லவர்கள். ஒரு காலத்தில் இவர்கள் எடுக்கும் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் செம ட்ரெண்ட் ஆகி ரசிகர்களை திரையரங்குகளில் மிரள விட்டனர். ஆனால் இவர்களை மிஞ்சும் அளவிற்கு 1970களில் வெளிவந்த ஒரு படத்தை கூறலாம்.
இந்த படத்தின் திரைக்கதை அவ்வளவு திரில்லராக இருக்கும். இப்போ இருக்கும் டெக்னாலஜிகளுக்கு சவால் விடும் வகையில் எடுக்கப்பட்ட படம் அது. 1976ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சஸ்பென்ஸ் தொடராக வெளிவந்த படம்தான் துணிவே துணை. எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜெய்சங்கர், பிரபா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
Also Read: இந்தமுறை ராகவா லாரன்ஸ் பேயை வைத்து இயக்கவில்லை.! பின்பு எதை எடுக்கிறார் தெரியுமா?
இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். இந்தப் படத்தில் சிஐடி-யாக ஜெய்சங்கர் மற்றும் விஜயகுமார் நடித்திருப்பார்கள். விஜயகுமாரின் அண்ணன் மர்மமாக இறந்து விடவே அதை கண்டுபிடிக்கிறார் ஜெய்சங்கர். இதில் பொன்வயல் என்ற கிராமத்தைப் பற்றியும் அங்கு செல்பவர்கள் மர்மமான முறையில் இறந்து விடுவார்கள் என்பதால், அங்கு போலீஸ் உள்ளிட்ட வெளியூர் ஆட்கள் செல்ல தயங்கிவார்கள்.
அந்த சமயத்தில் காவல்துறை அதிகாரி விஜயகுமார் அந்த கிராமத்திற்கு அனுப்பப்படுகிறார். அவர் ரயிலில் செல்லும் போது ஏராளமான அமானுஷ்யமான விஷயங்களை சந்திக்கிறார். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவுடன் இதுவரை அவர் பார்த்திடாத வித்தியாசமான அமானுஷ்யங்களை சந்திக்கிறார்.
Also Read: பாலியல் புகார் கொடுத்த காஞ்சனா 3 பட நடிகை யார் தெரியுமா?
இறுதியில் அந்த ரயில்வே ஸ்டேஷனில் மர்மமான முறையில் வந்து நிற்கும் குதிரை வண்டி காரனிடம் சொல்லி பொன்வயல் கிராமத்திற்கு செல்கிறார். அமானுஷ்யமான அந்த குதிரை வண்டிக்காரனிடம் பேசிக்கொண்டே செல்லும்போது, திடீரென்று வெள்ளை உருவத்தில் ஒரு பெண் பேய் பாடிக் கொண்டிருப்பதை பார்த்து, பயத்தில் இறந்து விடுகிறார். பின்பு அவர் பேய் அடித்து தான் இறந்து விடுகிறார் என்று ஊர் மக்களால் பேசப்பட்டது.
இதனால் விஜயகுமாரின் சகோதரராக வரும் ஜெய்சங்கரை அதே பணிக்கு மீண்டும் சென்றார். பின்பு விஜயகுமார் சென்ற அதை அமானுஷ்ய குதிரை வண்டியில் அவரும் ஏறுகிறார். பிறகு பேய் இடம் பயந்து தப்பித்து கிராமத்துக்குள் புகுகிறார். இப்படி அடுத்தடுத்த காட்சிகள் பக் பக் திக் திக் என துணிவே துணை திரைப்படம் முழுவதும் ரசிகர்களை சீட்டோடு கட்டி போட வைத்திருக்கும். இந்தப் படம் இப்பொழுது வரும் காஞ்சனா, அரண்மனைக்கு சவால் விடும் படமாக அப்போது எடுக்கப்பட்டது.
Also Read: 16 வயதிலேயே திருமணமான பெண்ணாக நடித்தேன்.! காஞ்சனா 3 பட நடிகை ஒப்பன் டாக்.!