விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய நிலையில், விரைவில் நடைப்பயணம் செய்து, கட்சியைப் பலப்படுத்தி, அதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் தன் கட்சியையும் கொள்கைகளையும் கொண்டு சேர்க்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார்.
ஏற்கனவே தனது முதல் மாநாட்டில் திமுக அரசையும், அக்கட்சியையும் கடுமையாக விமர்சித்த நிலையில், பாஜகவையும் தாக்கிப் பேசினார். போதாக்குறைக்கு, சீமானை அவர் விமர்சிக்கவில்லை என்றாலும்கூட, சீமானே விஜய்யை வாண்ட்டடாக வம்பிழுக்கு இழுத்து விமர்சித்து வருகிறார்.
தமிழக அரசியல் களமே தேர்தல் நேரத்தில்தான் சூடுபிடிக்கும் என்றால், அரசியல் தலைவர்களின் மேடைப் பேச்சுகளும்ம் , அவர்களும் செயல்பாடுகளும்கூட நெட்டின்சன்களுக்கும், மீடியாக்களுக்கும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் நல்ல கண்டெண்ட் கிடைக்கும்.
அப்படித்தான் தற்போது நடந்து வருகிறது. அதன்படி, விஜய் சமூக வலைதளத்தில்தான் அரசியல் செய்கிறார். களத்திற்கு வந்தபாடில்லை என மற்ற கட்சியினர் விமர்சித்த நிலையில் விஜய், விரைவில் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறார் என அரசல் புரசலான தகவல் நேற்று வெளியான நிலையில், இது கழக உடன்பிறப்புகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக மீது கை வைத்தால் தான் அடுத்து வரும் தேர்தலில் தனக்கு ஓட்டு விழும் என விஜய் நம்புகிறார் என கூறப்படுகிறது. ஆனால், அதிமுக, பாஜகவையே லெட்ப் ஹேண்டில் டீல் பண்ணும் திமுக, அடுத்து விஜய்69 பட ரிலீஸின் போது தனது வேலையைக் காட்டலாம்? என சினிமா விமர்சகர்கள் தரப்பில் தெரிவித்தாலும், திமுக தரப்பில் இருந்து தவெகவுக்கு பதிலடி கொடுக்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
‘காசு கொடுத்தால் கூட தொண்டர்கள் வருவதில்லை, அரசின் திட்டங்களும் யாருக்கும் தெரிவதில்லை’ என திமுக பிரமுகர் நேற்று மேடையில் பேசினார். ஆனால் காசு கொடுக்காமல் விஜய்க்கு கூடிய கூட்டமே அனைவரையும் அவரைப் பற்றிப் பேச வைத்துள்ளது.
இந்த நிலையில், கோவையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சியின்போது, மேஜையின் மீது விரிக்கப்பட்டிருந்த துணி, விஜயின் தவெக கட்சிக் கொடியைப் போல் இருந்ததால் உடனடியாக மாற்றப்பட்டது. அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்த சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
விஜயின் கொடி, அவரது பாடல் என எதுவும் திமுக, அரசு நிகழ்ச்சிகளில் இடம்பெறக் கூடாது என திமுக நிர்வாகிகள் விழிப்புடன் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.