எம்ஜிஆர் நடிப்பு, அரசியல் என இரண்டிலும் முத்திரை பதித்தவர். இவருடைய படங்கள் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது படம் வெளியானால் போதும் பல ரசிகர்களும் எந்த வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு படத்திற்கு சென்றுவிடுவார்கள்.
அந்த அளவிற்கு தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் திரையுலகை பொருத்தவரை இவரைத் தாண்டி ஒரு அணுவும் அசையாது. அப்படிப்பட்டவரை காதுபட அசிங்கமாக பேசிய டெக்னிஷியன் ஒருவருக்கு, ஒரே வாரத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார் எம்ஜிஆர்.
Also Read: ஒரே படத்தால் தலைகீழாக மாறிய ஆட்டம்
அதாவது 1966 ஆம் ஆண்டு திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அன்பே வா’ படத்தில் எம்ஜிஆர். சரோஜாதேவி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் நாகேஷ், அசோகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தில் 120 கிலோ மாமிச மலையை தூக்கி போடும் சண்டைக் காட்சி இடம்பெற்றிருக்கும்.
அந்த 120 கிலோ மாமிசம் மலையை எப்படி எம்ஜிஆர் சமாளிப்பார் என்று டெக்னிஷியன் மட்டுமல்ல எல்லோரும் சண்டைக்காக காத்திருந்தனர். எம்ஜிஆர் வெறும் அட்டக்கத்தி வீரர் என்று ஒருவர் டெக்னிசியன் ஒருவர் பேசிவிட்டார். ஆனால் எம்ஜிஆர் தினந்தோறும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யக் கூடிய நபர்.
Also Read: எம்ஜிஆரை பற்றி யாரும் அறியாத 5 விஷயம்
அந்த டெக்னிசியன் பேசியதைக் கேட்டதும் எம்ஜிஆர் அதற்கு எதுவும் பதில் கொடுக்காமல், கூடுதல் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டு ஒரு வாரத்திற்குப் பிறகு அந்தச் சண்டைக் காட்சியில் 120 கிலோ மாமிச மலையை தூக்கி எறிந்து விட்டார்.
படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி காதுபட அசிங்கமாக பேசியதற்கு பதில் பேசாமல் செய்து காட்டிய எம்ஜிஆரை படக்குழு மட்டுமல்ல இதை அறிந்த ரசிகர்களும் வியந்து பாராட்டினார்கள்.
Also Read: நல்லது செய்ய பிரபலத்துடன் போட்டி போட்ட எம்ஜிஆர்