வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பிக் பாஸ் நடிகையின் அந்தரங்க வீடியோவால் பரபரப்பு.. ட்ரெண்ட் செய்யும் இணையவாசிகள்

Bigg Boss: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் அந்த தொலைக்காட்சிக்கு சென்றால் எப்படியும் பிரபலமாகிவிடலாம் என்பதால் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் செல்ல ஆர்வமாக இருந்து வருகிறார்கள். சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இதுவரை 8 சீசன்கள் கடந்தாலும் முதல் சீசன் பலராலும் மறக்க முடியாது. ஏனென்றால் அப்போது பிக் பாஸ் பற்றி பெரிதாக யாருக்கும் எந்த எண்ணமும் இல்லை. அதோடு மிகவும் சுவாரசியமாகவும், போட்டியாளர்கள் எதார்த்தமாகவும் இருந்தனர். அந்த சீசன் ஓவியாவுக்கு மிகுந்த ஆதரவு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலிருந்து வெளியே வந்தாலும் மிகப்பெரிய பெயருடன் ஓவியா வந்தார். ஆனால் பட வாய்ப்பு பெரிதாக கிடைக்காத காரணத்தினால் 90ml போன்ற கவர்ச்சியான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படங்கள் பெரிய அளவில் போகவில்லை.

இணையத்தில் ட்ரெண்டாகும் பிக் பாஸ் நடிகையின் வீடியோ

ஓவியா கவர்ச்சி படங்களில் நடிப்பது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று எக்ஸ் தளத்தில் ஓவியா நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். இதற்கு காரணம் அந்தரங்க வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. அதில் இருக்கும் பெண்ணின் முகம் பிளர் செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் டாட்டுவை வைத்து இது ஓவியா என்று ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். இது ஓவியாவா என பலரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். ஒருபுறம் ஓவியாவின் பெயரை கெடுப்பதற்காக பலர் இவ்வாறு செய்வதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை ராஷ்மிகா மந்தனா போல மாஃபிக் செய்து வெளியிட்டிருந்தனர். அதேபோல் இதுவும் மாப்பிங் செய்யப்பட்டிருக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது. ஓவியா இது குறித்து விளக்கம் கொடுத்தால் தான் உண்மை தெரிய வரும்.

Trending News