செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டல.. பார்த்திபனுக்கு ஆப்படித்த ஏ ஆர் ரகுமான், வைரலாகும் ட்வீட்

Actor Parthiban: புதுமை இயக்குனராக இருக்கும் பார்த்திபன் தன் படங்களில் எப்போதுமே ஏதாவது ஒரு வித்தியாசத்தை காட்டுவார். அதனாலேயே அப்படங்கள் வசூல் ரீதியாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக ரசிகர்களை கவர்ந்து விடும். இதுவே அவருக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆனால் சமீப காலமாக இவர் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார். அந்த வகையில் கடைசியாக அவர் இயக்கியிருந்த இரவின் நிழல் படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையை பெற்றது. இதன் மூலம் பார்த்திபன் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கூட கணக்கு போட்டார். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.

Also read: சாண்டி மாஸ்டர் ஹீரோவாக அவதரிக்கும் புது ரூட்.. ஏ ஆர் ரகுமான் இசையில் பிரம்மாண்டமான படம்

இதனால் சோர்ந்து போன அவர் இனிமேல் கமர்சியல் படங்களை மட்டும்தான் இயக்குவேன் என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் இளசுகளை குறி வைக்கும் வகையில் டீன் என்ற படத்தை இயக்கி வருகிறார். 13 முதல் 15 வரை இருக்கும் பிள்ளைகளின் வாழ்க்கை முறை தான் இப்படத்தின் கதை.

இப்படி ஒரு கதை களத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வரும் பார்த்திபன் ஏ ஆர் ரகுமானையும் துணைக்கு அழைத்திருக்கிறார். அதாவது இப்படத்தில் இசையமைக்க அவரை அணுகி இருக்கிறார். ஏற்கனவே இரவின் நிழல் படத்திற்கு அவர் இசையமைத்திருந்ததால் இம்முறையும் கூட்டணி சேர பார்த்திபன் மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார்.

Also read: தன் சாவுக்கு தானே ஒப்பாரி பாடல் பாடிய நடிகர்.. நல்ல பாட்டை வேஸ்ட் செய்த ஏ ஆர் ரகுமான்

ஆனால் அவருடைய ஆசை நிராசையாக போயிருக்கிறது. அதாவது ஏ ஆர் ரகுமான் நான் ரொம்ப பிசியாக இருப்பதால் உங்களுடன் இணைய முடியவில்லை என்று அவருக்கு மெசேஜ் செய்திருக்கிறார். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பார்த்திபன், இருவரும் இணைவோம் என்று நினைத்திருந்தோம். அது இயலாத போது நண்பர் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து வந்த மெயில் என்று அந்த மெசேஜை பகிர்ந்திருக்கிறார்.

parthiban-tweet
parthiban-tweet

ஏற்கனவே இரவின் நிழல் நிகழ்ச்சியின் போது ஏ ஆர் ரகுமான் மேடையில் இருந்த சமயத்தில் பார்த்திபன் சிறு விஷயத்திற்காக கோபப்பட்டது பெரும் சர்ச்சையாக மாறியது. அது ஏ ஆர் ரகுமானுக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. அதன் காரணமாகவே மீண்டும் கூட்டணி அமைக்க விரும்பாமல் அவர் இப்படி ஒரு ஆப்பு வைத்திருப்பதாக தெரிகிறது. அந்த வகையில் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பார்த்திபன் இதை அழகாகவே சமாளித்திருக்கிறார்.

Also read: மணிரத்தினத்தை பாலோ செய்த ஏ ஆர் ரகுமான்.. சத்தம் இல்லாமல் நடக்க போகும் சம்பவம்

Trending News