80, 90 காலகட்டங்களில் வலம் வந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பலமுறை ஜோடி போட்ட நடிகை ரோஜாவுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
பின்னர் பெப்ஸி யூனியன் தலைவர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார். தற்போது அரசியலில் அதிக கவனம் செலுத்திவரும் ரோஜா அங்கு ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஜாவுடன் மகள் அன்ஷு மாலிகா

Also Read: நெடு நெடுவென வளர்ந்த ரோஜா மகள் புகைப்படம்
அவ்வப்போது சமூக சேவைகளை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரோஜாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ரோஜா அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை விடுவார்.
தேவதையான ரோஜாவின் மகள்

சில வருடங்களுக்கு முன்பு சுட்டிப்பெண் போலிருந்த ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா(Anshumalika) தற்போது நெடுநெடுவென வளர்ந்து விட்டார். ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகாவின் சமீபத்திய புகைப்படம் பலரை ஆச்சரியப்படுத்துகிறது.
கதாநாயகியாக மாறப் போகும் ரோஜாவின் மகள்

Also Read: கின்னஸ் சாதனை படைத்த ரோஜா
ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிய ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகாவை நடிக்க வைக்க ரோஜா-செல்வமணி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதற்காக சில டோலிவுட் இயக்குனர்களையும் அவர்கள் அணுகியுள்ளனர்.
சினிமாவில் தன்னுடைய மகளை சைலண்டாக நுழைக்க ரோஜா காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார். மேலும் அவருடைய மகளும் தற்போது அமெரிக்காவில் திரையுலக சம்பந்தப்பட்ட படிப்பை முடித்துவிட்டு விரைவில் திரும்ப இருப்பதால் கூடிய விரைவில் அவரை கதாநாயகியாக தென்னிந்திய படங்களில் பார்க்க வாய்ப்பிருக்கிறது.
Also Read: முதல்வருக்கு முத்தம் கொடுத்த ரோஜா!
தற்போது இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைப்பதால் அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் கூடிய விரைவில் ரோஜாவின் மகளும் சினிமாவில் ஒரு ரவுண்டு கட்ட காத்திருக்கிறார்.
அதிதிக்கு டஃப் கொடுக்க வரும் ரோஜாவின் மகள்

Also Read: பல வருடங்களாக தவமிருந்த ரோஜா