புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நீங்க பத்து தலையா இருக்கலாம் ஆனா நான் ஒரே தல தான்.. இளையராஜா, ஏஆர் ரகுமானுக்கு வைக்கும் செக்

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு பெரிய பஞ்சம் நிலவி வந்தது. ஆனால் தற்போது தடுக்கி விழுந்தால் 100 இசையமைப்பாளர்கள் என்ற நிலை உருவாகி உள்ளது. அதிலும் 10 படங்கள் ரிலீசானால் அதில் எட்டு படங்களில் இவர்தான் தன் கொடியை பறக்க விடுகிறார்.

இப்பொழுது வரக்கூடிய படங்களில் 95 சதவீதம் படங்களுக்கு அனிருத் தான் இசையமைக்கிறார். அந்த அளவிற்கு சினிமாவில் இவர் வளர்ந்து விட்டார். ஆயினும் இவருக்கு வயது 31 தான். இந்த இளம் வயதிலேயே தனது திறமையால் அனைவரையும் வியக்க வைக்கும் அனிருத், டாப் நடிகர்களின் முதல் சாய்ஸ் ஆக இருக்கிறார்.

Also Read: நாலு செகண்ட்ல உயிர் தப்பிய மகன்.. பரபரப்பாக பேட்டி அளித்த ஏஆர் ரகுமான்

இவருடைய இசையில் தளபதி விஜய்யின் லியோ, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர், தலைவர் 170 , உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகிறது. அது மட்டுமல்ல இளம் நடிகர்களின் படங்களிலும் இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.

டாடா படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற கவின் அடுத்ததாக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் படத்திற்கு அனிருத் தன் இசையமைக்கப் போகிறார். இவருடைய இந்த வளர்ச்சி, டாப் இசை அமைப்பாளர்களான ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோருக்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்துகிறது.

Also Read: ஏஆர் ரகுமான் இடத்தை பிடித்து விட்ட பிரபல இசையமைப்பாளர்.. கைவசம் உள்ள 6 பிரம்மாண்ட படங்கள்

தமிழ் சினிமாவில் சமீப காலமாகவே வெளியாகும் பெரும்பாலான படங்களுக்கு அனிருத் தான் இசையமைப்பதால், ‘நீங்க பத்து தலையா இருக்கலாம். ஆனால் நான் ஒரே தலை’ என மூத்த இசையமைப்பாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்.

அதிலும் இவருடைய வளர்ச்சி இளையராஜா மற்றும் ஏஆர் ரகுமானுக்கு வச்ச செக் ஆகவே பார்க்கப்படுகிறது. மேலும் அனிருத் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கிலும் நிறைய படங்களில் கமிட் ஆகிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, இவருக்கு இளையராஜா, ஏஆர் ரகுமான் வயது வரும்போது நிச்சயமாக பெரிய உச்சத்தை அடைந்திருப்பார்.

Also Read: அதிகளவில் சம்பளம் வாங்கும் 6 இசையமைப்பாளர்கள்.. இவங்கதான் டாப் என அன்றே கணித்த பாலச்சந்தர்

Trending News