செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

7 மாதத்தில் 57 வயது ஹீரோவை அம்போன்னு விட்டுட்டு போன கப் கேக்.. பேரன், பேத்தி எடுக்கிற வயசுல கல்யாணம் செஞ்சா இதான் கெதி

டாப் நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பின் இளம் ஹீரோக்களுடன் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவர் இப்போது 57 வயதில் சின்னத்திரையையும் கலக்கினார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் படங்களிலும் சீரியல்களிலும் ரவுண்டு கட்டி நடித்த இவருக்கு திருமணம் ஆகி 28 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

ஆனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவதால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இதை அடுத்து 57 வயதான அந்த நடிகர் 24 வயது இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சோசியல் மீடியாவில் செம ஃபேமஸான அந்த இளம் பெண் மூத்த நடிகருடன் சேர்ந்து நெருக்கமான வீடியோஸ், புகைப்படங்களை எல்லாம் பதிவிட்டு இளசுகளை கடுப்பேற்றினார்.

பேரன், பேத்தி எடுக்கிற வயசுல, இதெல்லாம் என்னடா கூத்து என்று நெட்டிசன்களும் கிழித்து தொங்க விட்டனர். அப்படியும் அடங்காத இந்த ஜோடி பேட்டி அளிக்கும் போது கூட லிப் லாக் செய்வது, கட்டிப்பிடித்து உரசுவது என இல்லாத சில்மிஷமே கிடையாது. இந்த ஜோடிக்கு திருமணமான போது, ரசிகர்கள் இந்த விஷயத்தை பரபரப்பாக பேசினார்.

Also read: ஷூட்டிங் பார்க்க வந்த குடும்ப பெண்ணை கரெக்ட் செய்த வில்லன்.. மாமா வேலை பார்த்த மகாபிரபு

 மூத்த நடிகரை கழட்டி விட்ட போன கப் கேப்

ஏனென்றால் 30 வயது வித்தியாசம் உடைய மூத்த நடிகரை இளம் பெண் திருமணம் செய்து கொள்வது பலரையும் வாயடைக்க வைத்தது. அந்த மூத்த நடிகர் இந்த இளம் பெண்ண ‘கப் கேக்’ என்று தான் செல்லமாக அழைப்பார். இந்த ஜோடிக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்ததனாலையோ என்னமோ இப்போது அந்த கப் கேக் 57 வயது நடிகரை விட்டு பிரிந்து விட்டார்.

இவர்கள் இருவரும் சில நாட்களாகவே எந்த வீடியோஸையும் சோசியல் மீடியாவில் பதிவிடுவதில்லை. அது மட்டுமல்ல இவர்களுக்கு திருமணம் ஆகி 7 மாதம் தான் ஆகிறது. அதற்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டு சமூக வலைதளங்களில் இவர்கள் ஒன்றாக இருந்த புகைப்படங்களை எல்லாம் நீக்கி விட்டார்கள். கப் கேக்கும் அந்த மூத்த நடிகருக்கும் பிரேக்கப் ஆனது தான் இப்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக பேசப்படுகிறது.

Also read: மகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த அம்மா.. கிடைச்ச வரைக்கும் லாபம் என்று நினைத்த ஹீரோ

Trending News