செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மொத்தமாய் தலையில் துண்டை போட்ட பிரபாஸ், திடீர் விசிட் அடித்த அனுமன்.. ஆதிபுருஷ் அட்ராசிட்டிஸ்

Movie Aadipurush: இந்திய சினிமா ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ஆதிபுருஷ் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த படம் இந்த ஆண்டிற்கான மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பான் இந்தியா திரைப்படம் ஆகும். திட்டமிட்டபடி இன்றைய தேதியில் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. சமூக வலைத்தளம் முழுக்க இந்த படம் சம்பந்தப்பட்ட செய்திகள் தான் தற்போது வைரலாகி வருகிறது.

ராமாயணத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு ஆதிபுருஷ் திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ராமனாக பிரபாஸ், ராவணனாக சைய்ப் அலிகான் மற்றும் சீதையாக கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்கள். பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸின் படங்களுக்கு என்று இந்திய சினிமாவில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் தான் இந்த படமும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.

Also Read:பிரபாஸின் தல தப்பியதா.? ஆதிபுருஷ் படம் எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

எப்போதுமே வரலாறு மற்றும் இதிகாச படங்களை கொண்டாடும் இந்திய சினிமாவில் இந்த படம் ஆரம்பத்திலிருந்து கேலிக்குள்ளாகியது. மோசமான vfx தொழில்நுட்பத்துடன் டிரைலரை வெளியிட்டு முதலிலேயே சர்ச்சைக்குள்ளானது இந்த படம். அதன் பின்னர் தொழில்நுட்பங்களை மேம்படுத்தி ட்ரெய்லரை வெளியிட்ட கையோடு, படக்குழு இந்த படத்தின் ரிலீஸ் போது ஒவ்வொரு தியேட்டர்களிலும் அனுமனுக்கு என்று ஒரு சீட் ஒதுக்கப்படும் என சொல்லி இருந்தார்கள்.

ஆதிபுருஷ் படக்குழுவின் இந்த அறிவிப்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் சீரியசாக எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கான பல காட்சிகள் காலியாக இருக்கிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் நிறைய தியேட்டர்களில் பத்துக்கும் குறைவான டிக்கெட்டுகள் தான் பதிவாகி இருக்கின்றன. அனுமனுக்காக ஒரு சீட் மட்டும் விட சொன்னால், ஒட்டு மொத்த திரையரங்கையுமே விட்டுக் கொடுத்து விட்டார்கள் போல தெரிகிறது.

Also Read:ஆதிபுருஷ் விமர்சனம் கிளப்பிய பீதி.. 600 கோடியும் முதலை வாயில் போட்ட கதையா?

போதாத குறைக்கு வட இந்திய பகுதியின் தியேட்டர் ஒன்றில் முதல் காட்சியின் போது குரங்கு ஒன்று வந்திருக்கிறது. உடனே அங்கிருந்தவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் பாடலை பாடி பக்தி பரவசமாக இருக்கிறார்கள். மேலும் அனுமன் தான் இந்த படத்தை பார்க்க நேரில் வந்திருக்கிறார் என்று சொல்லி வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரல் ஆக்கி வருகின்றன.

                                ஆதிபுருஷ் திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் புகுந்த குரங்கு

Aadipurush movie
Aadipurush movie

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் அதிகமான அம்மன் படங்கள் ரிலீஸ் ஆகும்போது தியேட்டரிலேயே பெண்கள் அருள் வந்து சாமி ஆடியதாக செய்திகள் வெளியானதுண்டு. இப்போது அதையெல்லாம் ஒரு படி தாண்டி அனுமனுக்காக சீட் விடுவது, அனுமனே நேரில் வந்து விட்டார் என்று சொல்லி பஜனை பாடுவது என ஆதிபுருஷ் பட ரிலீஸ் பயங்கர அட்ராசிட்டிஸ் காட்டி வருகிறது.

Also Read:சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா.? முதல்ல அனுமார், இப்ப ராமர்.. ஆதிபுருஷ் தல தப்புமா!

Trending News