செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024

உப்பு சப்பில்லாமல் போன ஆலியா பட்.. ராஜமவுலி பட விவகாரத்தில் அந்தர்பல்டி

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடிகை ஆலியா பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்ஆர்ஆர் பட சம்பந்தப்பட்ட அனைத்து போஸ்ட்டுகளையும் நீக்கினார். இது திரையுலகினர் மத்தியில் சிறு சலசலப்பை உருவாக்கியது.

மேலும் இந்தப்படம் ஆரம்பிக்கப்படும் போது இயக்குனர் ராஜமௌலி ஆல்யாவிடம் உங்கள் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்று கூறிவிட்டு படத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக வைத்தது தான் அவரின் இந்த செயலுக்கு காரணம் என்று செய்திகள் வெளியானது.

உண்மையில் ஆல்யாவும் இப்படி ஒரு அதிருப்தியில் தான் இருந்திருக்கிறார். ஏனென்றால் இந்த படத்தை நம்பி அவர் ஏகப்பட்ட தேதிகளை இயக்குனருக்காக ஒதுக்கிக் கொடுத்துள்ளார். ஆனால் இறுதியில் படத்தில் அவருடைய காட்சிகள் குறைக்கப்பட்டது அவருக்கு அதிக கோபத்தை கொடுத்திருக்கிறது.

அதனால் தான் அவர் தன்னுடைய கோபத்தை இப்படி காட்டி விட்டதாக செய்திகள் மீடியாவில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் இயக்குனர் ராஜமவுலியும் செம டென்ஷனில் இருந்து உள்ளார். இப்படி ஆல்யா குறித்து செய்திகள் வெளியானதை பார்த்த அவருடைய அப்பா, ராஜமவுலி மிகப்பெரிய இயக்குனர் நீ இப்போது தான் வளர்ந்து வருகிறார் அதனால் அவரைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆல்யாவுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

சுதாரித்துக்கொண்ட அவரும் தன்னுடைய சோஷியல் மீடியாவில் இந்த நிகழ்வு எதார்த்தமாக நடந்ததுதான். என்னைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் உண்மை கிடையாது ஆர்ஆர்ஆர் படத்தில் நான் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இப்படி ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தில் நானும் இருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதனால் யாரும் என்னை பற்றி இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம். ராஜமௌலி சாருடன் இந்த படத்தில் நடித்தது எனக்கு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் தன்னைப்பற்றி பரவும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருந்தாலும் ராஜமௌலியின் கோபம் குறைந்ததா என்பது அவருடைய அடுத்த பட அறிவிப்பில் தான் தெரியும். ஏனென்றால் இன்னும் சில நாட்களில் அந்தப் படத்தின் ஹீரோயின் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார்.

Trending News