வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஆனந்தி கழுத்தில் வலுக்கட்டாயமாக தாலி கட்ட துணிந்த நந்தா.. அன்புவின் போராட்டம் ஜெயிக்குமா?

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ ரசிகர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த இரண்டு, மூன்று வாரங்களாகவே நந்தா, ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டு இருப்பதும், அதை தகர்க்க அன்பு என்ன செய்யப் போகிறான் என்ற ஒரே கான்செப்ட் தான் போய்க்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பத்துடன் இந்த கான்செப்ட் நகர்ந்து கொண்டே இருந்தது. அதற்கு இந்த வாரத்தில். வைக்க இருக்கிறார்கள். அன்பு, நந்தாவிடமிருந்து ஆனந்தியை காப்பாற்றுவதோடு அவன் தான் அழகன் என்ற உண்மையை சொல்லிவிட வேண்டும் என்பதுதான் இப்போதைக்கு சீரியல் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நேற்று வரைக்கும் நந்தாவை திருமணம் செய்து கொள்ள ஆனந்தி மலைக்கோவிலுக்கு செல்வது போல தான் காட்டப்பட்டது. ஆனால் இன்றைய ப்ரோமோவில் ஆனந்திக்கு நந்தா உண்மையான அழகன் இல்லை என தெரிந்து விட்டது போல் காட்டப்படுகிறது.

அன்புவின் போராட்டம் ஜெயிக்குமா?

இதன் பின்னால் கண்டிப்பாக ஏதாவது ஒரு பிளாஷ்பேக் நடந்து இருக்கும். மலை கோவிலுக்கு வரும் ஆனந்தி நீ அழகனின் முகமூடியோடு வந்தால் நான் உன்னை நம்பி விடுவேனா எனக்கேட்டு நந்தா வை பளார் என அறைந்து விடுகிறாள்.

ஆனால் அதற்கு முன்பே அந்த பயங்கர சட்டத்தில் கோவிலில் இருந்து இருக்கிறான். தான் செட் பண்ணி ஆட்களை வைத்து ஆனந்தியை லாக் பண்ணி அவளுக்கு வலுக்கட்டாயமாக தாலி கட்ட போகிறான். அந்த சமயத்தில் சரியாக அன்பு அந்த இடத்திற்கு வருவது போல் காட்டப்படுகிறது.

இன்றைய எபிசோடில் கண்டிப்பாக அன்பு நந்தா மற்றும் அவன் செட் பண்ணிய ஆட்களுடன் சண்டை போட்டு ஆனந்தியை காப்பாற்றுவது உறுதி. ஆனால் அன்பு தான் உண்மையான அழகனா என்று ஆனந்தியிடம் சொல்வானா என்பதுதான் இப்போதைய சந்தேகம்.

அது மட்டுமில்லாமல் அதே இடத்திற்கு மகேஷும் மித்ராவுடன் வந்து கொண்டிருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமீபத்தில் சிங்க பெண்ணில் நடந்த சம்பவங்கள்

Trending News