வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கையும் களவுமாக மாட்டிய ஆதி.. சரவணன் செய்த வேலையால் காரித்துப்பிய குடும்பம்

விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் சிவகாமியின் இளையமகள் ஆதி, ஜெசி என்ற பெண்ணை காதலித்து, அவரை கர்ப்பமாக்கி ஏமாற்றி உள்ளார். இதை ஜெசி அர்ச்சனாவின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது சிவகாமியிடம் இதைப்பற்றி சொன்னபோது, அவர் ஆதியின் மீது அபரிமிதமான நம்பிக்கையில் ஜேசியை அசிங்கப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

அதன்பிறகு ஜெசி தன்னுடைய அம்மா அப்பாவுடன் சேர்ந்து கமிஷனர் ஆபீஸுக்கு புகாரளிக்க சென்றார். ஆனால் சந்தியா அவர்களை தடுத்து நிறுத்தி ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். ஆதியின் முகத்திரையை கிழித்தெறிந்து வீட்டில் இருப்பவர்களிடம் உண்மையை எடுத்துக் கூறுகிறேன் என்று சமாதானப்படுத்தினார்.

Also Read: ஆதியின் முகத்திரையை கிழித்த சந்தியா.. அவமானத்தில் கூனி குறுகிய சிவகாமி

அதன்பிறகு சந்தியா ஆதிக்கு ஒரு பெண் பார்க்க செல்வதாக கூறி அனைவரையும் அழைத்து செல்கிறார். அங்கு அந்தப் பெண் ஆதி இடம் தனியாக பேச வேண்டும் என்று ஒரு அறைக்கு அழைத்துப் போகிறார். அங்கு ஜெசி இருக்கிறார்.

அப்போது ஆதி ஜெசியிடம் வயிற்றில் இருக்கும் குழந்தையை கலைத்து விடு என திமிர்த்தனமாக பேசியதை குடும்பத்தினர் அனைவரும் கேட்கும்படி சந்தியா செய்துவிடுகிறார். இதனால் சிவகாமிக்கு, ஆதியின் சுயரூபம் தெரிந்து கன்னத்தில் சரமாரியாக அறைகிறார்.

Also Read: குடும்ப மானம் கப்பல் ஏறுதே.. கமிஷனர் ஆபீஸில் கதறி துடித்த சந்தியா

அதன்பிறகு சரவணனும் ஆதியின் கீழ்தரமான செயலை சகித்துக் கொள்ள முடியாமல் அடி உதை கொடுக்கிறார். குடும்பமே ஆதியை காறித் துப்புகிற நிலை ஏற்பட்டது. இதன்பிறகு சிவகாமி, ஆதி-ஜெசி இருவருக்கும் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்கிறார்.

இவ்வாறு குடும்ப மானத்தைக் காப்பாற்றிய சந்தியாவை சிவகாமி பெருமையாக நினைக்கிறார். இதன் பிறகு சிவகாமியின் மாமியாரும் சந்தியா போலீஸ் ஆவதற்கு தன்னுடைய சம்மதத்தை தெரிவிக்க இந்த செயல் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

Also Read: ஐபிஎஸ் சந்தியா விரித்த வலை.. மாட்டிக்கிட்டியே பங்கு

Trending News