வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அந்தர் பல்டி, தம்பியை வெளுத்து வாங்கிய சரவணன்.. சிக்கி சின்னாபின்னமான சிவகாமியின் குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடர் தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது அர்ச்சனாவுக்கு வளைகாப்பு கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் ஆதியின் காதலியின் ஜெஸ்ஸியும் கலந்து கொள்கிறார். எதிர்பாராதவிதமாக ஜெஸ்ஸி மயக்கம் அடைகிறார்.

அப்போது சரவணனின் பாட்டி ஜெஸியின் கையை பிடித்த பார்த்துவிட்டு கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். உடனே சிவகாமி அவரை கண்டபடி திட்டி வீட்டை விட்டு வெளியே போகுமாறு தரதரவென இணைக்கிறார். இது என்னுடைய புருஷன் வீடு, என் கர்ப்பத்திற்கு காரணமானவர் இங்குதான் இருக்கிறார் என ஜெஸ்ஸி கூறுகிறார்.

Also Read : சக்களத்தி சண்டையை மிஞ்சும் மருமகள்களின் சண்டை.. வீட்டையே பார்லர் ஆக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

ஆதி தான் காரணம் என எல்லோர் முன்னிலையிலும் ஜெஸ்ஸி சொல்கிறார். இதைக்கேட்டு சிவகாமியின் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தது. அதன்பின்பு ஆதியிடம் சிவகாமி கேட்க எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அதன்பின்பு இந்த பொண்ணு சொல்றதுல எதுவும் உண்மை இல்லை என்ற ஆதி கூறுகிறார்.

இந்த பொண்ண எனக்கு தெரியும், ரெண்டு, மூணு தடவை பார்த்திருக்கேன் அவ்வளவுதான், அதுக்கு மேல எங்களுக்குள்ள எதுவுமே கிடையாது என முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசுகிறார் ஆதி. இதைக் கேட்டு ஜெஸ்ஸி பேரதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.

Also Read : பேரன், பேத்தி எடுக்கிற வயசுல விவாகரத்தா.. செழியனை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கும் மாமியார்

இதைத்தொடர்ந்து ஜெஸ்ஸி அர்ச்சனாவிடம் நாங்க ரெண்டு பேரும் காதலித்த விஷயம் உங்களுக்கு தெரியும் இல்ல எல்லார்கிட்டயும் சொல்லுங்க என்ன சொல்கிறார். ஆனால் அதற்காக அர்ச்சனா ஒன்றும் தெரியாதது போல அமைதியாக உள்ளார்.

இந்நிலையில் சிவகாமி ஜெஸ்ஸியை வீட்டை விட்டு வெளியே துரத்த, நீதி கிடைக்கும் வரை இங்கிருந்து போகமாட்டேன் என வீட்டின் முன்னால் தர்ணா செய்கிறார் ஜெஸ்ஸி. அப்போது அவரது பெற்றோர் வந்து நடந்ததைக் கேட்டு ஜெஸ்ஸியை அடிக்கின்றனர். இந்நிலையில் சந்தியா இந்த விஷயத்தில் ஈடுபட்ட உண்மையைக் கண்டுபிடிப்பார். இப்படி ராஜா ராணி மீனாட்சியின் குடும்பம் அசிங்கப்பட்டு நிற்கிறது.

Also Read : சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த பாக்யா குடும்பம்.. வில்லி அவதாரம் எடுக்கும் சக்காளத்தி

Trending News