திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரபல நடிகையை உருகி, உருகி காதலித்த அப்பாஸ்.. சுயநலத்திற்காக கழட்டி விட்ட அந்த ஹீரோயின்

Actor Abbas: 90களில் காலகட்டத்தில் சாக்லேட் பாய் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். தற்போது சினிமா பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வெளிநாட்டில் செட்டிலான இவர், ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. சமீபத்தில் இந்தியா வந்திருக்கும் அப்பாஸ் நிறைய பேட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய சினிமா அனுபவத்தை பற்றி பேசி வருகிறார்.

அடுத்தடுத்து படங்கள் நடித்து வெற்றி பெற்று இருக்க வேண்டிய அப்பாஸ் குறுகிய காலகட்டத்திலேயே சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் செகண்ட் ஹீரோ, வில்லன் என நடிக்க ஆரம்பித்தது அவருக்கு தோல்வியை தான் கொடுத்தது. மேலும் இவருக்கு சினிமாவில் ஒரு காதல் தோல்வியும் இருந்திருக்கிறது. பிரபல நடிகை ஒருவரை காதல்  செய்த அப்பாஸை அந்த ஹீரோயின் நேரம் பார்த்து கழட்டி விட்டிருக்கிறார்.

Also Read:தெருவுக்கு ஒரு சின்ன வீடு.. 50 வயதில் நடிகர் அடிக்கும் லூட்டி

1996 ஆம் ஆண்டு ரிலீசான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அப்பாஸ் 1997இல் பூச்சுடவா என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சிம்ரன். படத்தில் எந்த அளவுக்கு இவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதோ அதே அளவுக்கு நிஜத்திலும் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. இருவரும் காதலித்திருக்கிறார்கள்.

அப்பாஸுக்கு ஒரு பக்கம் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருந்திருக்கின்றன. அதேபோல்தான் நடிகை சிம்ரனுக்கும் பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் சிம்ரனுக்கு முழுக்க முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் படங்கள் வாய்ப்பு அதிகமாக கிடைத்திருக்கிறது. மேலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகி இருக்கிறது.

Also Read:பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்த வாரிசு நடிகை.. தற்கொலை செய்து கொண்ட கணவர்

சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற காதல் வதந்திகள் ஏதாவது வெளியில் தெரிந்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது என யோசித்த சிம்ரன், நேக்காக நடிகர் அப்பாஸை கழட்டி விட்டு விட்டாராம். அப்பாஸ் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார். அதே நேரத்தில் அவருக்கு பட வாய்ப்புகளும் அப்படியே டல்லாகிவிட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின் ஆகவும், நன்றாக நடனம் ஆடக்கூடிய நடிகையாகவும் அடையாளம் காணப்பட்ட நடிகை சிம்ரன் அப்பாஸின் காதலை நிராகரித்த ஒரு சில வருடங்களிலேயே டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரத்துடன் காதலில் இருப்பதாக அப்போதைய மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

Also Read:அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி செல்லும் நடிகர்.. காதலை தாண்டி சென்ற அந்தரங்க உறவு

Trending News