திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 6 நடிகர்கள்.. தூங்கி எழுந்ததும் செலிபிரிட்டி அந்தஸ்தில் வானத்தில் பறந்த அப்பாஸ், பிரசாந்த்

6 Actors Act First Movies Success: பெரும்பாலும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்ததுமே வெற்றியை பார்த்து விட முடியாது. படிப்படியாக அடிமேல் அடிவாங்கி போராடி தான் எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற முடியும். ஆனால் சில நடிகர்களுக்கு இது விதிவிலக்காக அமைந்திருக்கிறது. அதாவது அவர்கள் நடித்த முதல் படத்திலேயே பேரும் புகழையும் சம்பாதித்து தொடர் வெற்றிகளை பார்த்து வந்திருக்கிறார்கள். அந்த நடிகர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

கார்த்தி: இவர் நடித்த முதல் படமான பருத்திவீரன் படத்தை பார்த்த பிறகு தான் யாரு இந்த ஹீரோ சூப்பரா நடிச்சிருக்காரு என்று கேட்கத் தோன்றியது. அதன் பின் தான் சிவகுமாரனின் இரண்டாவது மகன், சூர்யாவின் தம்பி என்ற விஷயமே தெரிய வந்தது. பின்பு சினிமா ரத்தம் இவரது உடம்பில் ஓடுகிறது. அதனால் தான் நடிப்பை தெறிக்க விட்டிருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு பருத்திவீரன் படத்தில் தத்ரூபமான நடிப்பை கொடுத்திருப்பார். அதனை தொடர்ந்து தற்போது வரை வெற்றி நடிகராக பயணித்துக் கொண்டு வருகிறார்.

Also read: ராஜ்கிரண் காலில் விழுந்து கதறும் கார்த்தி.. சூட்டிங் ஸ்பாட்டில் வேஷ்டி பாய் செய்யும் அக்கப்போரு

விக்ரம் பிரபு: சிவாஜி பேரன் மற்றும் பிரபுவின் மகன் என்ற அந்தஸ்துடன் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமான கும்கி ரசிகர்களுக்கு பிடித்த படமாக வெற்றி பெற்று இவருக்கு ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. அத்துடன் இவருக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஹீரோவாக ஜொலித்துக் கொண்டு வருகிறார்.

மாதவன்: தமிழில் அலைபாயுதே என்ற படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாகவும், இளசுகளின் மனதை சுண்டி இழுத்த நடிகராகவும் மக்கள் மனதில் பதிந்தார். இப்படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இவருடைய வீட்டில் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை இவர் பக்கம் பிடித்துக் கொண்டார். மேலும் இதைத் தொடர்ந்து இவர் நடித்த முக்கால்வாசி காதல் மற்றும் ரொமாண்டிக் படங்கள் தான்.

Also read: 5 தமிழ் படங்களோடு முடிந்த சகாப்தம்.. மாதவன் கேரியரை தூக்கி நிப்பாட்டிட்டு ஐட்டம் டான்சராக மாறிய நடிகை

ஜெயம் ரவி: இவருடைய அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்று ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை கொடுத்தது. இதனை தொடர்ந்து இவர் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இடத்தைப் பிடித்துக் கொண்டார். அத்துடன் இவர் நடித்தால் அந்த படம் வெற்றி அடைந்து விடும் என்ற நிலைமைக்கு வந்து விட்டார்.

பிரசாந்த்: நடிகர் மற்றும் இயக்குனரான தியாகராஜனின் மகனாக பிரசாந்த் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். இவர் நடித்த வைகாசி பிறந்தாச்சு சூப்பர் ஹிட் படமாக ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினார்கள். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து செம்பருத்தி, திருடா திருடா, ஆணழகன் ஜீன்ஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் நடித்த முதல் படத்திலிருந்து இவருக்கு கிடைத்த மிகப்பெரிய அந்தஸ்தில் பறக்க ஆரம்பித்து விட்டார்.

அப்பாஸ்: இவர் காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி சாக்லேட் பாயாக அனைவரது மனதையும் கொள்ளையடித்தார். இவருடைய அழகும், தோற்றமும் இவரை தொடர்ந்து ஹீரோவாக கொண்டு சென்றது. அந்த வகையில் விஐபி, பூச்சுடவா, பூவேலி, மலபார் போலீஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இவர் நடித்த முதல் படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக கை கொடுத்து தூக்கி விட்டது.

Also read: எல்லா பெரும் தலைகளுடன் நடித்த அப்பாஸ்.. 5 படங்களிலும் ஆடியன்சை அள்ளிய சாக்லேட் பாய்

Trending News