ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கோலங்கள் தொல்காப்பியனை சந்தித்த அபி ஆதி.. சேர்ந்து வரும் பார்ட் 2, ஓகே சொன்ன கலாநிதி

Kolangal 2 and Ethirneechal 2: சன் டிவியில் எத்தனை சீரியல்கள் வந்தாலும் சில சீரியல்கள் காலத்தால் அழிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு இப்பொழுது வரை பெயர் வாங்கி வருகிறது. அந்த லிஸ்டில் சித்தி, மெட்டிஒலி, கோலங்கள் இருக்கிறது. அதனால் தான் இப்பொழுது கூட இந்த சீரியல்களில் இருக்கும் காட்சிகள் அனைத்தும் ட்ரெண்ட் ஆகி கொண்டு வருகிறது.

இதனைப் பார்த்த மக்களும் மறுபடியும் மெட்டிஒலி மற்றும் கோலங்கள் இரண்டாவது பாகத்தை பார்க்க நாங்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கும். திருச்செல்வம் மற்றும் திருமுருகன் மறுபடியும் ஒரு நல்ல கதையுடன் வர வேண்டும் என்று மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று கோலங்கள் சீரியல் தொடங்கி 20 வருஷம் ஆகிய நிலையில் இந்த நாடகத்தை எடுத்த திருச்செல்வம் என்கிற தொல்காப்பியுடன் சேர்ந்து அபி மற்றும் ஆதி பேட்டி கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல விஷயங்களை சுவாரஸ்யமாக பேசிக் கொண்ட இவர்கள் ஆதி மற்றும் அபியின் நடிப்புதான் இந்த நாடகத்திற்கு தூணாக அமைந்தது என்று தொல்காப்பியன் பாராட்டி பேசினார்.

இதனை தொடர்ந்து ஆதி கேரக்டரில் நடித்த அஜய் கபூர், தொல்காப்பியனிடம் கேட்ட கேள்வி என்னவென்றால் மக்கள் மற்றும் நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கோலங்கள் 2 எப்பொழுது வரும் என்ற கேள்வி தான். இதற்கு சட்டென்று பதில் கொடுத்த தொல்காப்பியன் அதற்கான வேலைகள் எல்லாம் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் எல்லாம் கைகூடும் என்று சொல்கிறார்.

உடனே தேவயானி, இப்பமே எல்லாத்தையும் சொல்லிடாதீங்க சார் ப்ளீஸ் சர்ப்ரைஸ் போய்விடும் என்று தடுத்து விடுகிறார். அந்த வகையில் கோலங்கள் 2 நிச்சயம் வரும் என்று ஊர்ஜிதனம் ஆகிவிட்டது. இதை கேட்டதும் ஆதிக்கும் ரொம்ப சந்தோசம் கோலங்கள் 2 நாடகத்தை எதிர்பார்த்த மக்களுக்கும் மிகப்பெரிய ட்ரீட்டாக அமையப் போகிறது. இன்னொரு பக்கம் எதிர்நீச்சல் 2 நாடகத்திற்கும் மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதால் அதற்கான வேலைகளையும் பார்த்து வருகிறார்.

அந்த வகையில் இந்த இரண்டு நாடகங்களை சேர்த்து ஒரு தரமான சம்பவத்தை செய்ய தயாராக இருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இதற்கு கலாநிதி மாறனும் சம்மதத்தை கொடுத்து விட்டார். அதனால் இன்னும் கூடிய விரைவில் கோலங்கள் 2 மற்றும் எதிர்நீச்சல் 2 சேர்ந்து வரப் போகிறது. இதில் முக்கிய வில்லனாக ஆதி மறுபடியும் ஆட்டிப்படைக்க போகிறார்.

Trending News