சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

பிரபலங்களிடம் இருந்து குவிந்த பணம்.. போண்டாமணியிடம் ஆட்டையப் போட்ட நபர்

தமிழில் 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த போண்டாமணி, சமீபத்தில் இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து மருத்துவமனையில் சீரியசாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பல பேட்டிகளில் தன்னுடைய உடல் நிலையை குறித்து பேசி வருகிறார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு பண உதவி தேவைப்பட்டதால் விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களும் முன்வந்து உதவிக்கரம் நீட்டினார். அவர் மருத்துவமனையில் அனுமதித்த போதும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பிரதீப் என்பவர் போண்டாமணி இடம் வந்து நலம் விசாரிப்பது போல் நெருக்கமாக பழகி இருக்கிறார்.

Also Read: பந்தாவாக பேசி பேட்டி கொடுத்த வடிவேலு.. எதிர்பார்த்து ஏமாந்து போன நடிகரின் பரிதாப நிலை

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு செல்லும்போது போண்டாமணி, செலவுக்கு பணம் வேண்டும் என்பதால் அவருடன் இருந்த ஏடிஎம் கார்டை ராஜேஷ் பிரதீப்பிடம் கொடுத்து பணம் கொடுத்து வரச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் சில மணி நேரமாக அவர்கள் விரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த போண்டாமணி அவரது வங்கிக் கணக்கில் சோதித்துப் பார்த்தபோது 1,04,941 ரூபாய்-க்கு நகைக்கடை ஒன்றில் நகை எடுத்தது போன்ற எஸ்எம்எஸ் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

Also Read: உதவிக்கரம் கேட்டு மன்றாடிய காமெடி நடிகர்.. ஒரு லட்சத்தை டெபாசிட் செய்த விஜய் சேதுபதி

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு சுதாரிக்காமல் விட்ட போண்டாமணி சில நாட்களே பழகியவரை நம்பி ஏமாந்திருக்கிறார். இதுகுறித்து போண்டா மணியின் மனைவி மாதவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு போலிஸ் ராஜேஷ் பிரதீப்பை கைது செய்து விசாரணை நடத்தியபோது, அந்த தினேஷ் ஏற்கனவே சிவராம், குரு, ராஜேஷ் பெருமாள் போன்ற பல்வேறு பெயர்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: போண்டா மணியின் உயிரை காப்பாற்ற உதவிய நடிகர்.. இந்த நடிகருக்கு ஹீரோவை விட காமெடி நல்லா வரும்

Trending News