ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

துவண்டு போய் இருக்கும் விக்ரமுக்கு கை கொடுக்கும் நடிப்பு அரக்கன்.. புதுப்படத்திற்கான அப்டேட்

Vikram new movie update: வெற்றியும் தோல்வியும் நிரந்தரம் இல்லை என்பதற்கு ஏற்ப நடிகர் விக்ரமின் கேரியர் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் சரியான வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் அலோல்லபட்டு வந்த விக்ரமுக்கு சேது படத்தின் மூலம் நடிகராக அங்கீகாரம் கிடைத்தது. அதன் மூலம் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இடத்தை பிடித்துக் கொண்டார்.

அதற்கேற்ற மாதிரி எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் உடலை வருத்திக்கொண்டு  துணிஞ்சு செய்யக்கூடிய ஒரு துணிச்சலான நடிகர். அப்படிப்பட்டவர் கடந்த சில படங்களால் தொடர் தோல்வியை அடைந்து வெற்றிக்கு போராடி வருகிறார். இதற்கிடையில் இவருடைய தங்கலான் படம் ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.

இதனால் மிகவும் துவண்டு போய் இருக்கும் விக்ரமுக்கு அடுத்து விடிவுகாலமாக ஒரு விஷயம் நடக்கப் போகிறது. அதாவது தங்கலான் படத்திற்கு அடுத்து இவருடைய அடுத்த படமான சீயான் 62 படம் உருவாகப் போகிறது. இப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்க இருக்கிறார். இவர் கடந்த வருடம் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த சித்தா படத்தை வெற்றிகரமாக கொடுத்திருக்கிறார்.

Also read: என்னப்பா சொல்றீங்க! விக்ரம் கூட சசிகுமார் நடித்திருக்காரா!. சித்தப்பா தயவில் சியானுக்கு அடித்த ஜாக்பாட்

அத்துடன் பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சிந்துபாத் போன்ற படங்களையும் இயக்கி இருக்கிறார். தற்போது ஐந்தாவது முறையாக விக்ரம் வைத்து சியான் 62வது படத்தை இயக்கப் போகிறார். மேலும் இப்படத்தை HR பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. இந்த நிலையில் விக்ரமுக்கு கை கொடுக்கும் விதமாக நடிப்பு அரக்கனும் இணையப் போகிறார்.

சமீபத்தில் வெளிவந்த படங்களில் இவருடைய வில்லத்தனத்தை ரசிக்கக் கூடிய அளவிற்கு நடிப்பை கொடுத்து வருபவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் தான் விக்ரம் நடிக்கப் போகும் 62வது படத்திற்கு முக்கிய வில்லனாக கமிட்டாகி இருக்கிறார். அந்த வகையில் விக்ரம் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பு இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக அமையப் போகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க போகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறார்கள்.

சீயான் 62 படத்திற்கான புதிய அப்டேட்

vikram 62 sj surya
vikram 62 sj surya

Also read: விக்ரம், சூர்யாவுக்கு நடுவே இருக்கும் மிகப்பெரிய மனக்கசப்பு.. கல்யாணத்திற்கு கூட கூப்பிடாததற்கு இதுதான் காரணம்

Trending News