Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் எப்படி இருக்கிறது என்றால் வர வர மாமியார் கழுதைப் போல தேய்ந்தால் என்று சொல்வார்கள். அதுபோலத்தான் பாக்கியலட்சுமி சீரியலும் போகப் போக கண்றாவியாக போகிறது என்று இந்த நாடகத்தை பார்ப்பவர்கள் வெறுத்துப் போய் புலம்பித் தவிக்கிறார்கள். ஆரம்பத்தில் என்னமோ நல்லா தான் இருந்துச்சு, அதிலும் குடும்ப இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் வகையில் சுவாரஸ்யமாக அமைந்தது.
ஆனால் தற்போது கதையே இல்லாமல் ஏதோ நாடகத்தைக் கொண்டு போக வேண்டும் என்று உருட்டி வருவது போல் இருக்கிறது. அந்த வகையில் கோபி, ராதிகாவின் டார்ச்சரை அனுபவிக்க முடியாமல் நொந்து நூடில்ஸ் ஆகி விட்டார். ஆனாலும் ராதிகா, கோபியின் நிலைமையை புரிந்து கொள்ளாமல் ரொம்பவே ஓவராக டார்ச்சர் செய்கிறார்.
ஏற்கனவே பணக்கஷ்டத்தில் கோபி தட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறார். இதுல வேற ராதிகா, கோபியை நகைக்கடைக்கு கூட்டிட்டு போய் கிட்டத்தட்ட 3 லட்சத்துக்கு மேல் நகையை வாங்குகிறார். அத்துடன் இதற்கு கோபியை பணம் கொடுக்க சொல்கிறார். இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் கோபி தல சுற்றி கீழே விழுந்து விட்டார்.
உடனே ராதிகா இவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து ட்ரீட்மென்ட் செய்கிறார். அப்போது மருத்துவர்கள் கோபிக்கு ஒன்னும் இல்லை. அவருக்கு ஏதோ மன அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது அதனால் தான் ரொம்ப வீக்கா இருக்கிறார் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் பாக்கியாவின் மாமியார் கோபிக்கு போன் பண்ணி பேசுகிறார்.
அப்பொழுது கோபி எனக்கு உடம்பு சரியில்லை நெஞ்சுவலி வந்துவிட்டது. அதனால் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் என்று சொன்னதும் பதறி அடித்து அவரைப் பார்க்க போய்விடுகிறார். அதன் பின் கோபியை பார்த்ததும் நீ எங்களுடன் வீட்டுக்கே வந்துவிடு என்று கூட்டிட்டு வருகிறார். கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாக்கியா வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஷாக்காகி நிற்கிறார்கள். இதில் மறுபடியும் கோபியை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து தவறுக்கு மேல் தவறு செய்கிறார்.
பழைய குருடி கதவை திறடி என்பதற்கு ஏற்ப கோபி வந்ததும் பின்னாடியே ராதிகாவும் வந்து பிரச்சனை பண்ணப் போகிறார். சரி அம்மா தான் தான் கூப்பிட்டாலும், இந்த கோபிக்கு கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமலேயே பாக்கியாவிடம் தஞ்சம் அடைய வந்து விட்டார். இதெல்லாம் பார்த்த பாக்கியா, மாமியாரிடம் இது என்னுடைய வீடு அவர் இங்கே இருப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்று அதிரடியாக பேசி வீட்டை விட்டு அனுப்பப் போகிறார்.