Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வீட்டிற்கு வந்தது சுத்தமாக பாக்யாவிற்கு பிடிக்கவில்லை. அதனால் கோபியை கூப்பிட்டு உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஏதாவது சண்டை என்றால் அதை பேசி முடிவு பண்ணி சரி பண்ணுங்க. அதுவும் இல்லை என்றால் வேற வீட்டுக்கு எங்கேயாவது போங்க. எதற்கு சம்பந்தமே இல்லாம இந்த வீட்டில் இருக்கீங்க.
உங்க பசங்க உங்க அம்மா உங்களை இந்த வீட்டுக்கு கூப்பிட்டால் நீங்கள் உடனே மறுத்து இருக்கணும். அதை விட்டுவிட்டு சின்ன பிள்ளை மாதிரி இந்த வீட்டுக்கு வந்ததால் உங்க மனைவி அந்த வீட்டுக்கும் இந்த வீட்டுக்கும் அவமானப்பட்டு அலைகிறார். அதெல்லாம் பற்றி கொஞ்சம் கூட உங்களுக்கு யோசனையே இல்லையா? நீங்க என்கிட்ட ஒரு உதவி கேட்டீங்க அதையும் செஞ்சிட்டேன். அதற்கும் நீங்கள் நன்றி சொல்லிட்டீங்க அதோட முடிஞ்சு போச்சு.
அதை விட்டுட்டு இந்த வீட்டிலேயே இருந்து எல்லா வேலையும் பார்த்து உங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும் என்று யோசித்து இங்கே இருப்பது சரி இல்லை. உங்களுக்கு ஒரு வாரம் டைம் தரேன் அதுக்குள்ள இந்த வீட்டை விட்டு போயிருக்கணும், இல்லையென்றால் நான் என்ன முடிவு எடுப்பேன் தெரியாது. இப்பொழுது தான் நான் நிம்மதியாக இருக்கிறேன், அதையும் கெடுக்கும் விதமாக வந்து விடாதீங்க. சீக்கிரத்தில் இந்த வீட்டை விட்டு கிளம்புங்க என்று பாக்யா சொல்லிவிட்டார்.
அடுத்ததாக ராதிகா, ஈஸ்வரி கோபியை விவாகரத்து பண்ணு என்று சொன்னதை நினைத்து பார்த்து பீல் பண்ணுகிறார். இதனை பார்த்த ராதிகாவின் அம்மா, சமரசம் செய்யும் விதமாக பேசிய நிலையில் இன்னும் ஒரு வாரம் தான் கோபிக்கு டைம். அதுக்குள்ள அவரு இங்க வந்துட்டா ஓகே, இல்லை என்றால் நானும் என் பொண்ணும் எப்படி இருக்கணும் எப்படி வாழனும் என்று எனக்கு தெரியும். என் வாழ்க்கை நானே பார்த்துக்கொள்கிறேன் என்ற மனநிலைமையில் ராதிகா, அவருடைய அம்மாவிடம் தெளிவாக கூறி விட்டார்.
பிறகு மயூ, கோபியை பார்த்து பேசுவதற்காக பாக்யா வீட்டு வாசல் வரை வந்து விட்டார். ஆனால் உள்ளே போனால் ஈஸ்வரி ஏதாவது திட்டி பிரச்சினை பண்ணுவாரு என்ற பயத்தில் திரும்பி போக பார்த்தார். அப்பொழுது மயூவை பார்த்த பாக்யா, உன்னுடைய டாடிய பார்க்க வந்தியா? ஏன் அப்போ திரும்பி போகிறாய். வந்து பேசு என்று உள்ளே கூப்பிடுகிறார். அதற்கு மயூ, நான் வந்தா ஈஸ்வரி பாட்டி திட்டி விடுவார்கள் என்ற பயம் தான் என்று சொல்கிறார்.
உடனே பாக்யா அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க நீ வா நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூப்பிடுகிறார். அதற்கு மயூ இனி டாடி எங்க கூட எங்க வீட்ல வந்து இருக்க மாட்டாரா? எங்களை விட்டு இந்த வீட்டிலே இருந்து விடுவாரா என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் விதமாக பாக்கியா பேசும் பொழுது ராதிகா அங்கிருந்து வந்து பாக்யாவை திட்டி மயூவை கூட்டிட்டு போய்விடுகிறார்.
இதனால் கோபத்தில் வீட்டிற்குள் போன பாக்கியா நேரா அடுப்பாங்களில் வேலை பார்க்கிறார். அதே நேரத்தில் இனியா, செழியன், கோபி மற்றும் ஈஸ்வரி அனைவரும் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிகமாக கோபப்பட்டு விட்டார். அந்த வகையில் நேரடியாக கோபியிடம் சென்று இன்னும் ஏன் உங்க வீட்டுக்கு போகாம இங்கே இருக்கீங்க.
உங்களுக்கு ஒரு வாரம் தானே டைம் கொடுத்தேன். தயவு செய்து இந்த வீட்டை விட்டு போங்க என்று சொல்லிய நிலையில் செழியன் மற்றும் இனியா ஏனம்மா இப்படி சொல்கிறாய். அப்பா நம்ம உடனே இருக்கட்டும், அங்கு போன தேவையில்லாத பிரச்சினை வரும் என்று சொல்லும் போது ஈஸ்வரியும் என் பையன் எங்கேயும் போகமாட்டான் என்ன பண்ண முடியும் உன்னால என்று கேட்கிறார். அதற்கு பாக்கியா அப்படி என்றால் நான் இந்த வீட்டை விட்டு போய் விடுவேன் என்று அதிரடியான முடிவை கூறுகிறார்.
ஆனால் ஈஸ்வரி, பாக்யாவையும் வெளியே விடாமல் கோபியையும் போகவிடாமல் தடுத்து தில்லாலங்கடி வேலையை பார்த்து விடுவார். அதற்கேற்ற மாதிரி இந்த கோபியும் சூடு சொரணை இல்லாமல் அங்கே இருந்து கொண்டு பாக்கியவை லவ் பண்ணி புது டிராக்கை கொண்டு வருகிறார். இதற்கெல்லாம் ஒரே வழி பாக்கியா பேசாமல் இந்த வீட்டை விட்டு போயி எழில் கூட இருந்தால் தான் அனைவருக்கும் பாக்யாவின் அருமை புரியும்.