வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

உயிர் பயத்தால் ரோபோ சங்கர் எடுத்த அதிரடி முடிவு.. அதுக்குன்னு 21 வயசுல இப்படி செய்யணுமா!

Actor Robo Shankar: மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக சின்னத்திரையில் கலக்கிய ரோபோ சங்கர், தற்போது சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் கடந்த சில மாதங்களாக உடல் மெலிந்து பாதி ஆளாகவே மாறிவிட்டார். இவரைக் குறித்த பல செய்திகள் இணையத்தில் வெளிவந்ததால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு என்ன நடந்தது என்பதை மனம் திறந்தார்.

அதிலும் இப்போது அளித்த பேட்டியில் உயிர் பயத்தால் 21 வயதாகும் தன்னுடைய மகளுக்கு அவசர அவசரமாக திருமணத்தையும் பேசி முடித்ததாகவும் தெரிவித்தார். ஒரு பக்கம் ரோபோ சங்கர் சினிமாவில் வளர வளர அவருக்குள் இருந்த மது பிரியரும் வளர்ந்து கொண்டே இருந்திருக்கிறார். இதனால் குடிக்கு அடிமையான ரோபோ சங்கருக்கு உடலில் இருக்கும் உறுப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுப் போக ஆரம்பித்தது.

Also Read: பட்ட பின் புத்தி தெளிந்த ரோபோ சங்கர்.. மீடியா முன் உண்மையை போட்டு உடைத்த சம்பவம்

அதேசமயம் மஞ்சள் காமாலையும் முற்றி ரத்தத்தில் கலந்து விட்டதாம். சாவின் விளிம்புக்கே சென்ற ரோபோ சங்கர் மன உளைச்சலால் தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார். இதனால் 5 மாதம் படுத்த படுக்கையாக இருந்த ரோபோ சங்கர் தன்னுடைய குடும்பத்தின் உறுதுணையினால் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறாராம். ஒரு கட்டத்தில் உயிர் பயத்தின் காரணமாக ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கு சொந்த முறைமாமனையே திருமணம் செய்து வைக்க பேசி முடித்து விட்டாராம்.

தன்னுடைய காலத்திற்குப் பிறகு மகளுக்கு சேர வேண்டிய சொத்துக்களையும் முன்கூட்டியே எழுதி வைத்துவிட்டாராம். அந்த வகையில் சென்னையில் அவர் பெயரில் இருந்த வீடும் இந்திரஜா பெயரில் மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் மகளின் திருமணத்திற்காக தங்க நகைகளையும் எடுத்து வைத்திருக்கிறார். இவ்வாறு வெறும் 21 வயதாக இருக்கும் இந்திரஜாவிற்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருவீட்டாரும் பேசி முடித்து விட்டனர்.

Also Read: அடுத்தவர் வேதனையில் சம்பாதிப்பது ஒரு பொழப்பா? லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய ரோபோ சங்கர் மனைவி

விரைவில் இவர்களது திருமண தேதியும் அறிவிக்கப்படும் என்றும் ரோபோ சங்கர் இப்போது அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இந்திரா பிகில் படத்தில் பாண்டியம்மாள் என்ற கேரக்டரிலும், விருமன் படத்தில் அதிதிக்கு தோழியாகவும் நடித்திருப்பார். இப்போதுதான் அவர் தன்னுடைய கேரியரை துவங்கியிருக்கும் நிலையில், எதற்கு இந்த அவசர திருமணம் என பலரும் அவரிடம் கேள்வி கேட்டு இருக்கின்றனர். அதற்கு ரோபோ சங்கர் இந்த திருமணத்தில் இந்திரஜாவிற்கும் விருப்பம் தான், கத்திரிக்கா முத்துனா கடை தெருவிற்கு வந்துதானே ஆகணும் என்றும் ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார்.

மேலும் இந்திரஜாவை திருமணம் செய்து கொள்பவரும் சினிமா துறையில் தான் இருக்கிறார். அவரது பெயர் கார்த்திக். இவர் ஒரு சில படங்களை இயக்கியும் இருக்கிறாராம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம். ஆகையால் இந்திரஜா சினிமா துறையில் தன்னுடைய வருங்கால கணவர் கார்த்திக்குடன் இணைந்து பயணிப்பார் என்று ரோபோ சங்கர் நம்புகிறார்.

வருங்கால கணவருடன் இந்திரஜா 

indraja-cinemapettai
indraja-cinemapettai

Also Read: தற்கொலைக்கு முயன்ற ரோபோ சங்கர்.. சாவின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த அதிர்ச்சி காரணம்

Trending News