Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

மகளுக்காக களமிறங்கிய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்.. பயில்வானிடம் போலீஸ் விசாரணை!

மகளுக்காக களமிறங்கிய ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்.. பயில்வானிடம் போலீஸ் விசாரணை!

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன்,தற்போது தனது மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.இந்த விவகாரம் தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா,நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியைத் திருமணம் செய்துகொண்டார்.இதற்கிடையில், அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.இதில் ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.இதனைத் தொடர்ந்து,ஐஸ்வர்யாவின் திருமண வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு யூகங்களும்,ஆதாரமற்ற தகவல்களும் பரவத் தொடங்கின.

இதனால் அதிருப்தியடைந்த அர்ஜுன்,தனது மகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறான கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த நவம்பர் 19ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தில் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பேசிய கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தின.அர்ஜுனின் புகாரைத் தொடர்ந்து,சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பயில்வான் ரங்கநாதனை விசாரணைக்கு அழைத்தனர்.


அதன்படி,இன்று காலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் நேரில் ஆஜரானார்.அவரிடம் சர்ச்சைக்குரிய வீடியோ மற்றும் கருத்துகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரபலங்களின் குடும்ப வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் ஆதாரமின்றி தகவல்களைப் பரப்புவது எந்த அளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.இந்த விசாரணையைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.