வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

எப்பா சாமி இப்பவாவது முடிவுக்கு வந்தீங்களே.. பாரதி கண்ணம்மாவில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது கிளைமாக்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் ஹேமா தனது தந்தையை கண்டுபிடிப்பதாக சொல்லி வெளியில் செல்லும்போது வெண்பாவை தாக்குகிறார். இதனால் கோபப்பட்ட வெண்பா ஹேமாவை அடியாட்களை வைத்து கடத்தி விடுகிறார்.

கடைசியில் வெளிநாட்டுக்கு ஹேமாவை விற்று விடுகிறார்கள். இதனால் ஒரு டேங்கர் லாரியில் ஹேமாவை ஏற்றி வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்டு உள்ளனர். இந்நிலையில் கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா குடும்பம் எல்லோரும் ஹேமாவை தேடி ஊர் முழக்க அலைகிறார்கள்.

Also Read : பிக் பாஸால் என் வாழ்க்கையே நாசமாகிடுச்சு.. கதறும் பிரபலம்

ஒரு பக்கம் பாரதி டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் பார்ப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். இவ்வாறு சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று அரங்கேறி உள்ளது. பலமுறை பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாலும் வெண்பா சூழ்ச்சி செய்து டெஸ்ட் ரிசல்டை மாத்தி விடுவார்.

இந்த முறையும் இயக்குனர் இப்படி ஏதாவது செய்து கதையை இழுத்தடிப்பார் என்ற காத்திருந்த ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதாவது பாரதி, ஹேமா, லட்சுமி மூவரின் டிஎன்ஏ சரியாக ஒத்துப் போவதாக பாரதியிடம் டாக்டர் சொல்கிறார்.

Also Read : நம்ம பிரச்சனையே ஊர் சிரிக்கிது, இதுல புதுசா ஒன்னு வேறய.. என்ன பாக்யா இதெல்லாம்

இதைக் கேட்ட பாரதி ஒரு கணம் அதிர்ச்சி அடைகிறார். இத்தனை வருடமாக குற்றமற்ற கண்ணம்மாவை தன்னுடைய சந்தேகத்தின் பேரில் இவ்வளவு நாள் பிரித்து வைத்து விட்டோமோ என்ற மன வருத்தம் அவருக்கு ஏற்படுகிறது. கண்ணம்மாவின் காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என பாரதி உடனே சென்னைக்கு புறப்பட உள்ளார்.

அதற்குள்ளாகவே ஹேமா காணவில்லை என்ற விஷயம் பாரதிக்கு தெரிய வர உள்ளது. கடைசியில் வெண்பாவின் சூழ்ச்சியால் தான் எல்லாம் நடந்தது என்று அவரின் சுயரூபத்தை பாரதி அறிய உள்ளார். மேலும் ஹேமாவும் பத்திரமாக காப்பாற்றப்பட்ட உடன் மீண்டும் பழையபடி கண்ணம்மா, பாரதி சேர உள்ளனர்.

Also Read : ராட்சசன் ஆக மாறிய சம்மந்தி.. குடும்பத்தோடு அசிங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்

Trending News