செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆஸ்தான இயக்குனரை கழட்டி விட்ட அஜித்.. வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு நடந்த வாய்க்கா தகராறு

நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இயக்குனர் எச். வினோத்துடன் இணைந்து துணிவு படத்தில் பணியாற்றினார். இந்த படம் பொங்கல் கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் படமாக ஆனது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக நாடுகளிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. துணிவு படம் முடிந்ததிலிருந்தே நடிகர் அஜித் அடுத்து யாருடன் இணைவார் என்ற மிகப்பெரிய கேள்வி இருந்தது.

இந்நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடியும் தருவாயில் இருக்கும்போது நடிகர் அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் அனிருத் இசையமைப்பதும் உறுதியானது. துணிவு பட ரிலீசுக்குப் பின் ஏகே 62 வில் இணைய போகும் நடிகர்களை பற்றி தகவல்களும் வந்து கொண்டிருந்தன.

Also Read: லண்டன் வரை சென்ற விக்னேஷ் சிவன்.. அஜித், லைக்காவால் அவமானப்பட்ட சம்பவம்

இந்நிலையில் அஜித்தின் 62 ஆவது படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகி இருக்கிறார். ஏ கே 62வில் இருந்து விக்னேஷ் சிவன் விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்று எந்த உறுதியான தகவல்களும் இன்னும் இரண்டு பக்கத்தில் இருந்தும் வெளியாகவில்லை.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் 62 ஆவது படத்தின் தொடக்கத்திலேயே இதுபோன்ற சிக்கல்கள் எழுந்ததால் அஜித் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். இதற்கிடையில் தளபதி விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லி அஜித் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. சமூகவலைத்தளங்களில் இந்த தகவல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஆனால் அட்லி அஜித்தின் இந்த 62 ஆவது படத்தை இயக்குகிறாரா அல்லது அடுத்த 63 வது படத்தை இயக்கப் போகிறாரா என்று தெரியவில்லை. இந்நிலையில் அஜித்தின் இந்த படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக எந்த இயக்குனர் கையில் எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மொத்த தமிழ் சினிமா உலகையும் தொற்றிக்கொண்டது.

Also Read: தலைவர் சொன்னதால் அஜித் நடிக்க இருக்கும் பாட்ஷா-2.. உறுதிப்படுத்திய ஹெச். வினோத்

நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என்றால் அது இயக்குனர் விஷ்ணுவர்தன் தான். இவர் அஜித்துக்கு பில்லா, ஆரம்பம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். விஷ்ணுவர்தன் இப்போது இந்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் இயக்குனர் விஷ்ணுவர்தன் தற்போது ஒரு இந்தி படத்தில் படு பிஸியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நடிகர் அஜித்துக்காக விஷ்ணுவர்தனே இந்த படத்தை இயக்க முன் வந்தாலும் அஜித் அவருக்கு அந்த வாய்ப்பை தரப் போவதில்லை. அந்த அளவுக்கு இவர்கள் இருவருக்குள்ளும் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிகப்பெரிய பிரச்சனை நடந்திருக்கிறதாம்.

Also Read: அஜித் சார் கிட்ட இருந்து எல்லாரும் இந்த 3 விஷயத்தை கத்துக்கணும்.. பூரிப்புடன் பகிர்ந்துகொண்ட ஹெச்.வினோத்

Trending News