சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டரை பற்றி வெளியான தகவல்.. யாரும் எதிர்பார்க்காத டபுள் ட்ரீட்!

துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமாருக்கு அடுத்த ரிலீஸ் ஆக வர இருப்பது விடாமுயற்சி திரைப்படம் தான். இது அஜித்குமாருக்கு 62 வது திரைப்படம். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடெக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். படத்தின் ப்ரீ ப்ரொடெக்சன் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வெற்றியால் அடுத்த படமான விடாமுயற்சியின் மீது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனை பூர்த்தி செய்வதற்காக இயக்குனர் மகிழ் திருமேனியும் தன்னுடைய கடின உழைப்பை போட்டு வருகிறார். இவரின் முந்தைய படங்களின்வெற்றிகள் அஜித் ரசிகர்களுக்கு தற்போது அதீத நம்பிக்கையை இந்த படத்தின் மீது கொடுத்திருக்கிறது.

Also Read:அஜித்தின் விடாமுயற்சியின் ஸ்டோரி இதுதான்.. அப்செட்டில் இருக்கும் மகிழ்திருமேனி

இந்நிலையில் தற்போதைக்கு படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்பதை தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. படத்தில் அஜித்துடன் யார் யார் நடிக்கிறார்கள், யார் கதாநாயகி போன்ற எந்த அப்டேட்டுகளும் இல்லாத நிலையில் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மே மாத இறுதி வாரத்தில் தொடங்கும் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தை 70 நாட்களில் முடிக்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

தற்போது விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டரை பற்றி அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது தற்போது அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது. அஜித் கிட்டத்தட்ட பல வருடங்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவர் கடைசியாக அசல் திரைப்படத்தில் தான் இரட்டை வேடத்தில் நடித்தார்.

Also Read:விடாமுயற்சி வில்லனை உறுதி செய்த மகிழ்த்திருமேனி.. அவரே வெளியிட்ட பரபரப்பான பதிவு

இதனால் அஜித்துக்கு இரண்டு கதாநாயகிகள் இந்த படத்தில் இருக்கிறார்கள். கதாநாயகிகளுக்கான தேர்வு வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு அஜித் ஆஸ்திரேலியா கண்டத்திற்கு வேர்ல்டு டூர் செல்ல இருக்கிறார்.

கிட்டத்தட்ட 70 நாட்கள் நடக்க இருக்கும் இந்த படப்பிடிப்பில் கடைசி 40 நாட்களில் அஜித் குமார் கலந்து கொள்கிறார். மே இறுதி வாரத்தில் தொடங்கி இரண்டு மாதங்களில் முடிவடைய இருக்கும் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் இந்த படம் தளபதி விஜய்யின் லியோ படத்துடன் மோதுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே துணிவு மற்றும் வாரிசு நேருக்கு நேர் மோதிய நிலையில் இந்த எதிர்பார்ப்பு தற்போது உண்டாகி இருக்கிறது.

Also Read:முதல் 5 நாள் படத்திற்கு கூட்டமே இல்ல.. அடுத்த 80 நாட்களுக்கு தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் ஆன அஜித் படம்!

Trending News