வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அஜித்தையே அலறவிட்ட அபுதாபி கவர்மெண்ட்.. அசராமல் ஏகே செய்து காட்டிய அந்த விஷயம்

Ajithkumar: நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்திற்கு பிறகு, அவருடைய 62 ஆவது படமாக உருவாக இருப்பது விடாமுயற்சி. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படபிடிப்பு வேலைகள் விரைவில் தொடங்கப்படும் எனவும், மற்ற நடிகர்களை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விடாமுயற்சி படத்தின் பெரும்பாலான காட்சிகளை துபாயில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறது பட குழு. மேலும் துபாயிலிருந்து ஒரு மணி நேரம் பயணம் செய்தாலே அபுதாபி போய்விடலாம். அபுதாபியிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம். தற்போதைக்கு இந்த விஷயம் விடாமுயற்சி படத்தின் அப்டேட் ஆக உறுதியாகி இருக்கிறது.

Also Read:வெளிவந்த விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் அப்டேட்.. எனக்கு அந்த தேதியில் படம் முடியனும்னு அஜித் போட்ட கண்டிஷன்

பொதுவாக படப்பிடிப்பு தளங்களை தயார் செய்வதற்காக பட குழு தான் முதலில் லொகேஷனுக்கு செல்லும். ஆனால் விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும், நடிகர் அஜித்குமார் முதலில் துபாய் சென்று இருக்கிறார். அங்கு படப்பிடிப்பிற்கு தேவையான எல்லா விஷயங்களையும் அவரே தயார் செய்து கொண்டிருக்கிறாராம். விரைவில் பட குழுவும் அங்கு சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்குமாருக்கு நடிப்பை தாண்டி ரொம்பவும் பிடித்த விஷயம்தான் பைக் மற்றும் கார் ஓட்டுவது. படப்பிடிப்புக்காக எங்கே சென்றாலும், பிரேக் நேரத்தில் தன்னுடைய மோட்டார் பைக்கை எடுத்துக் கொண்டு ரைட் செல்வது அவருக்கு ரொம்பவே பிடித்த விஷயம். அஜித், அபுதாபியில் அதற்கான ஏற்பாட்டையும் தான் செய்திருக்கிறார்.

Also Read:அஜித் மச்சானுக்கு செய்த பெரிய துரோகம்.. தவம் கிடக்கும் ரிச்சர்ட்டை ஏமாற்றி 3வது நபரை வளர்த்து விட்ட ஏகே

அபுதாபி கவர்மெண்ட்டை பொறுத்த வரைக்கும் அங்கு லைசன்ஸ் வாங்குவது என்பது ரொம்பவே கடினமான விஷயமாம். லைசென்ஸ் வாங்க சென்ற அஜித்தை எட்டு போட சொன்னதோடு மட்டுமல்லாமல் எல்லா ரூல்ஸ் பற்றியும் கேட்டு தெரிந்திருக்கிறார்கள். அஜித்தும் பக்காவாக அதில் எல்லாவற்றிலும் பாஸ் செய்து அன்றே லைசென்ஸ் வாங்கி விட்டாராம். இதற்காக நண்பர்களுக்கு ட்ரீட்டும் கொடுத்திருக்கிறார்.

அஜித் இப்போதெல்லாம் மோட்டார் பைக் ரைடில் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் குழந்தைகளோடு அவர் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் கூட வைரல் ஆகியது. ஒரு பக்கம் படபிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்தாலும் இவர் எப்போதுமே தனக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதிலிருந்து தவறியதே இல்லை.

Also Read:விடாமுயற்சி எல்லாம் எனக்கு செகண்ட் ஆப்ஷன் தான்.. பாதி இலங்கையை வாங்கிய சுபாஸ்கரன்

Trending News