திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சத்தம் இல்லாமல் அஜித் செய்யும் பெரிய விஷயம்.. என்ன மனுஷன் இவரு, அதான் சாமின்னு கொண்டாடுறாங்க

Actor Ajithkumar: பொதுவாக வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரிய கூடாது என்பார்கள். ஆனால் இந்த காலத்தில் அதெல்லாம் நடக்காத விஷயம். இப்போது செய்யப்படும் பல உதவிகள் வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காகவே செய்யப்படுகிறது. எனக்கே தெரியாமல் போட்டோ எடுத்து போட்டு விட்டார்கள் என்று கூட கூச்சமே இல்லாமல் பப்ளிசிட்டி செய்யும் ஆட்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

ஆனால் நடிகர் அஜித்குமார் செய்யும் உதவி யாருக்குமே வெளியில் தெரியாது. அஜித் யாருக்கும் உதவ மாட்டார், சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க மாட்டார், அவருடைய படம் சரியான நேரத்தில் ரிலீஸ் ஆகாது, அவர் பைக் ஓட்டிக்கொண்டு ஊர் சுற்றுகிறார் என்று அவரைப் பற்றி குறை சொல்லவே நேரம் சரியாக இருப்பதால், செய்யும் பல நன்மைகள் வெளியில் பேசப்படாமல் போய்விட்டது.

Also Read:ஆடியோ லான்சை கேன்சல் பண்ணிட்டோமே தமிழ்நாட்ட குடுத்துருங்க.. உதயநிதிக்கு அஜித் கொடுத்த பதிலடி மீம்ஸ்

அஜித் உண்மையிலேயே கஷ்டம் என்று வருபவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர் என்று சினிமாவை சேர்ந்த ஒரு சிலர் சொல்லி இருக்கிறார்கள். சமீபத்தில் நடிகர் மாரிமுத்து இறந்த போது கூட அவருடைய மகன் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை படிப்பதற்கு பீஸ் கட்டியது அஜித் தான் என வெளியில் தெரிய வந்தது. இப்படித்தான் அவர் செய்த நிறைய உதவிகள் வெளியில் தெரியாமல் போய்விடுகிறது.

நடிகர் அஜித்குமாருக்கு சொந்தமாக மோகினி மணி பவுண்டேஷன் ஒன்று இருக்கிறது. அதாவது தன்னுடைய அம்மா மோகினி மற்றும் அப்பா சுப்ரமணி பெயரை வைத்து இந்த பவுண்டேஷனை தொடங்கி இருக்கிறார். இது NGO ஆகும். அரசாங்கத்திடமிருந்து எந்த உதவியும் பெறாமல் முதியோர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனம்.

Also Read:விடாமுயற்சியில் நடிக்கும் விஜய்யின் அப்பா.. வெளிவந்த புகைப்படத்தின் காரணம் இதுதான்

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் பற்றி வெளியில் தெரிந்த அளவுக்கு, அஜித்குமாரின் பவுண்டேஷன் தெரியவில்லை. இதற்கு காரணம் ஒரு சில உதவிகள் வெளியில் தெரிந்தால் தான் அதன் மூலம் உதவி பெறுபவர்கள் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும். ஒரு சில உதவிகள் வெளியில் தெரியாமல் செய்ய வேண்டும் என்பது நடிகர் அஜித்குமாரின் விருப்பம்.

அஜித் குமாரின் சம்பளத்தில் ஒரு பாதி இந்த தொண்டு நிறுவனத்திடம் சேர்ந்து விடுகிறது. அஜித் அவ்வப்போது இந்த நிறுவனத்திற்கு குடும்பத்தோடு சென்று அவர்களுடன் நல்லதொரு உறவை மேம்படுத்தி வருகிறார். தான் செய்யும் உதவிகள் வெளியில் தெரிய கூடாது என்பதில் அவர் ரொம்பவும் கவனமாக இருக்கிறார். எல்லா விதத்திலும் தனித்துவமாக இருக்கும் நடிகர் அஜித் இதிலும் தன்னுடைய ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

Also Read:மீண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அஜித், விஜய்.. பக்கா பிளான் போட்ட மகிழ்திருமேனி

Trending News