செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கடைசியாக ஒரு வாரம் கெடு கொடுத்த அஜித்.. முயற்சியே இல்லாமல் போன விடாமுயற்சி

கடந்த சில வருடங்களாக நடிகர் அஜித்குமாருக்கு ஒரு படம் நடித்து ரிலீஸ் செய்வது என்பது மிகப்பெரிய போராட்டமாக மாறிவிட்டது. இது வலிமை திரைப்படத்திலிருந்து ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அஜித்தை பொருத்தவரைக்கும் எதற்கும் ஓவராக பில்டப் கொடுக்காதவர் தான். இருந்தாலும் அவர் படங்களின் அப்டேட்டுகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த மார்ச் மாதம் அவருடைய 62 ஆவது படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியானது. அதன் பின்னர் துணிவு திரைப்படம் முடிந்து ரிலீஸ் ஆன பிறகு அவருடைய அடுத்த படத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நீக்கப்படுகிறார் என்று அப்டேட் மட்டுமே வந்து அஜித் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது.

Also Read:பல கெட்டப்பில் வெற்றி கண்ட 5 நடிகர்கள்.. இன்றுவரை அஜித் பெயரை காப்பாற்றும் மாஸ் கதாபாத்திரம்

விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட பிறகு அடுத்து இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்வியே மாத கணக்கில் ரசிகர்களிடையே இருந்து வந்தது. அதன் பின்னர் ஒரு வழியாக இயக்குனர் மகிழ் திருமேனி உறுதி செய்யப்பட்டார். அஜித்குமாரின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்று அப்டேட் வெளியானது.

டைட்டில் வெளியான பிறகும் படத்தைப் பற்றி வேறு எந்த அறிவிப்புகளும் இன்னும் வெளிவரவில்லை. துணிவு திரைப்படத்தோடு தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீசானது. அதன் பின்னர் விஜய் லியோ படத்தை நடித்து முடித்து, அவருடைய அடுத்த படமான தளபதி 68 படத்தின் அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இது அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவலையை உண்டாக்கி இருக்கிறது.

Also Read:ஒரு நிலையில் இல்லாத விடா முயற்சி.. விடாத பணத்தாசையில் எல்லாத்தையும் இழக்கும் அஜித்குமார்

மே மாத இறுதியில் தொடங்கப்பட வேண்டிய படப்பிடிப்பும் இன்னும் தொடங்கவில்லை. இதற்கு இடையில் லைகா நிறுவனத்தில் நடந்த ஐடி ரைடு படப்பிடிப்பை இன்னும் கால தாமதம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அஜித் பயங்கர கடுப்பில் இருக்கிறாராம். பட குழுவுக்கு ஒரு வாரம் கெடு கொடுத்து, வருகின்ற ஜூன் ஏழாம் தேதிக்குள் ஒரு முடிவை எடுத்து சொல்லுங்கள் என்று கறாராக சொல்லிவிட்டாராம்.

நடிகர் அஜித்குமாருக்கு ஏற்கனவே இந்த படத்தின் மீது இருந்த மொத்த இன்ட்ரஸ்ட்டும் போய்விட்டதாம் . சரி எப்படியாவது படத்தை முடித்துக் கொடுத்து விடுவோம் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், படக்குழு அவருக்கு ஏற்ற மாதிரி ஒத்துழைப்பு கொடுக்காமல் அஜித்தை டென்ஷன் மேல் டென்ஷன் ஆக்கி வருகிறது. இந்த படத்தை பற்றிய ஏதாவது ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:மோடியின் நண்பருடன் கைகோர்த்த மறைமுகமாக அஜித் செய்யும் வேலை.. ஆச்சரியத்தில் திரையுலகம்

Trending News