நடிகர் அஜித் பொதுவாகவே எல்லோரிடமும் நன்றாக பழகும் குணமுடையவர். இவரை பற்றி அதிகமாக எந்த தகவலும் அவ்வளவு சீக்கிரம் வெளிவருவதில்லை. பொது நிகழ்ச்சிகளிலும் அதிகமாக கலந்து கொள்ள மாட்டார். சமூக வலைதளங்களிலும் இவருக்கென்று எந்த அக்கவுண்டும் கிடையாது. இருந்தாலும் இவருக்கென்று சினிமாவில் நெருக்கமான 5 பேர் இருக்கின்றனர். அஜித்திற்கு மிக நெருக்கமான 5 பேர்,
வெங்கட் பிரபு: நடிகர் அஜித்குமாரின் 50 ஆவது படத்தை இயக்கியவர் இயக்குனர் வெங்கட் பிரபு. 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் அஜித்திற்கு ரெகார்ட் பிரேக்கிங் படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு அஜித்துக்கும், வெங்கட் பிரபுவுக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவானது.
சிறுத்தை சிவா: சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவா. 2014 ஆம் ஆண்டு அஜித்துடன் வீரம் படத்தில் இணைந்தார். வீரம் படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்துடன் இணைந்து வேதாளம் மற்றும் விஸ்வாசம் படங்களில் பணிபுரிந்தார்.
பிரகாஷ் ராஜ்: அஜித்தும், பிரகாஷ் ராஜும் இணைந்து ஆசை, ராசி, பரமசிவன் என மூன்று படங்களில் நடித்திருக்கின்றனர். பிரகாஷ் ராஜ் தொடக்கத்திலிருந்தே அஜித்திற்கு சினிமாவில் நிறைய விஷயங்களை கற்று கொடுத்திருக்கிறார்.
Also Read: டிரெய்லரிலேயே எதிர்பார்ப்பை கிளப்பிய 6 படங்கள்.. ரிலீசில் மண்ணை கவ்விய அஜித்
ரமேஷ் கண்ணா: ரமேஷ் கண்ணா அஜித்துடன் இணைந்து வீரம், அமர்க்களம், வரலாறு, காதல் மன்னன், நீ வருவாய் என, அட்டகாசம், வில்லன் என மொத்தம் 10 படங்களில் நடித்து இருக்கிறார். அஜித்திற்கு ரமேஷ் கண்ணா மிகவும் நெருக்கமானவர்.
போனி கபூர்: நடிகர் அஜித் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த நடிகர். ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிறகு அவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவருடைய கணவர் போனி கபூர் அஜித்தை வைத்து நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்தார். அதை தொடர்ந்து வலிமை, துணிவு என அடுத்தடுத்த படங்களில் இவர்கள் இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.