திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பொங்கலை குறிவைத்து ரிலீசான அஜித்தின் மாஸான 4 படங்கள்.. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த தீனா

நடிகர் அஜித் நடித்து ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் துணிவு திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய இருக்கிறது. இந்த படம் வரும் பொங்கலன்று தளபதி விஜயின் வாரிசுடன் ரிலீஸ் ஆகிறது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே வாரிசு vs துணிவு பொங்கல் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

இதுவரை வான்மதி, நேசம், தொடரும், தீனா, ரெட், பரமசிவன், ஆழ்வார், வீரம், விசுவாசம் என நடிகர் அஜித்தின் எட்டு படங்கள் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்கின்றன. துணிவு இந்த வரிசையில் ஒன்பதாவது படம் ஆகும். இந்த லிஸ்டில் தீனா அஜித்திற்கு ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. மேலும் இந்த படம் அஜித்தின் சினிமா கேரியரியரை இன்னும் ஒரு படி உயர்த்தியது.

Also read:பெரிய கும்பிடு போட காத்திருக்கும் விஜய்.. வாரிசு டீமால் நிம்மதியை தொலைத்த தளபதி

வான்மதி: காதல் கோட்டை வெற்றி இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் அஜீத் குமார், சுவாதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வான்மதி. இந்த திரைப்படம் மிகவும் மாறுபட்ட பொருளாதாரத்தில் உள்ள இரண்டு பேரிடையே உள்ள காதலை மையமாக கொண்டது . இப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது, 175 நாட்கள் ஓடியது.

தீனா: அஜித்தின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றால் அது தீனா தான். இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்தை ‘தல’ என்று அன்போடு ரசிகர்கள் கூப்பிட ஆரம்பித்தனர். இந்த படம் ஏ ஆர் முருகதாஸ்க்கு முதல் படம் ஆகும். ஆக்சன் நிறைந்த கேங்ஸ்டர் திரைப்படம் ஆகும்.

Also read:இதிலும் விஜய்க்கு போட்டியான அஜித்.. துணிவு கதையில் இருக்கும் சீக்ரெட்

வீரம்: வீரம் 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆகும். அஜித் குமார், தமன்னா,வித்தார்த், பாலா, முனீஷ், சுகைல் சந்தோக், சந்தானம், பிரதீப் ரவட், நாசர். ரமேஷ் கண்ணா, அதுல் குல்கர்ணி, தம்பி ராமையா, அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருந்தனர். பல வருடங்களுக்கு பிறகு அஜித் ஒரு குடும்ப பின்னணி நிறைந்த கதையில் நடித்திருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது.

விஸ்வாசம்: 2019 ஆம் ஆண்டு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைந்து பணியாற்றிய படம் விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா, ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடலுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது கிடைத்தது.

Also read:பெரிய மனுசனாக நடந்து கொள்ளாத போனி, மனக்கசப்பில் அஜித்.. துணிவை டீலில் விட்ட AK

Trending News