Allu Arjun : தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தனது 42வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். சிறுவயதிலேயே சினிமாவில் நடித்து வரும் இவருக்கு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஹிட் கொடுக்கும் வகையில் படங்கள் அமைந்து வருகிறது.
அந்த வகையில் அல்லு அர்ஜுன் கேரியரில் மைக்கல் ஆக அமைந்த படம் தான் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் மிரள விட்டிருந்தார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.
இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார். விளம்பரங்களில் நடிக்க நான்கு கோடி வரை அல்லு அர்ஜுனுக்கு கிடைக்கிறது.
450 கோடி மதிப்பில் அல்லு அர்ஜுனின் சொத்து மதிப்பு
ஹைதராபாத்தில் அல்லு அர்ஜுனுக்கு சொகுசு பங்களா இருக்கிறது. அதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ஆகும். மேலும் அல்லு அர்ஜுன் 80 கோடி மதிப்பில் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார். 450 கோடி மதிப்பில் அல்லு அர்ஜுனுக்கு சொத்து மதிப்பு உள்ளது.
மேலும் கார் மீது அதிகம் ஆர்வம் உடைய அல்லு அர்ஜுன் ஐந்து வகையான கார்களை வைத்திருக்கிறார். 7 கோடி மதிப்பிலான ஃபால்கான் என்ற வேனிட்டி வேன் வைத்துள்ளார். மேலும் 6.5 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், 1.78 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் கார்களும் இருக்கிறது.
மெர்சிடிஸ், ஜாகுவார் 99 லட்சம் மற்றும் ஹம்மர் 75 லட்சம் போன்ற கார்களும் அல்லு அர்ஜுன் கைவசம் இருக்கிறது. தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்த வசூல் மன்னனாக புஷ்பா நாயகன் அல்லு அர்ஜுன் வலம் வர இருக்கிறார்.