திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

மாஸ் ஹீரோ, மாஸ் தலைவர் ஆகிட்டாரே.. பரந்தூரில் தெறிக்கவிட்ட தளபதியின் பேச்சு, மிரண்டு போயிருக்கும் அரசியல் கட்சிகள்!

Vijay: ஜனவரி 20, கடந்த சில தினங்களாக தமிழக மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாள். இதற்கு காரணம் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

910 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் மக்களை இன்று விஜய் நேரில் சந்தித்து இருக்கிறார். விஜய் இந்த இடத்திற்கு போகவே பெரிய போராட்டம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய் போராட்டக்காரர்களை சந்தித்து இருக்கிறார். இவர் மக்களிடம் பேசிய பேச்சுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

அது மட்டுமில்லாமல் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பெரிய கட்சிகளை எல்லாம் ஆட்டம் காண வைத்திருக்கிறது.

தெறிக்கவிட்ட தளபதியின் பேச்சு

விஜய் பரந்தூர் மக்களிடம் இதுதான் தன்னுடைய அரசியல் களத்தை தொடங்குவதற்கான சரியான இடம் என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் பரந்தூர் மக்களுடன் என்றுமே நியாயத்திற்காக துணை நிற்பேன் என்றும் பேசி இருக்கிறார். விஜய் எப்போதுமே வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல, இயற்கை வளங்களை பாதுகாப்போம் முற்படுபவன்.

இந்த இடத்தில் விமான நிலையம் வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை. விவசாய நிலத்தை விட்டுவிட்டு வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

ஆனால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மட்டும் ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள். அப்போது இங்கே உங்களுக்கு வேறு ஏதும் லாபம் இருக்கிறது அல்லவா.

எதிர்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு ஆளும் கட்சியான உடன் விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொள்வதா.

உங்களுடைய நாடகத்தை இன்னும் மக்கள் நம்ப மாட்டார்கள். என்னை ஏன் இந்த ஊருக்குள் வர இவ்வளவு தடுக்க முற்படுகிறீர்கள்.

கண்டிப்பாக ஒரு நாள் பரந்தூர் ஊருக்குள் நான் வருவேன் என முழக்கமிட்டு இருக்கிறார் விஜய்.

Trending News