ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மீண்டும் சிக்ஸ் பேக் உடன் மிரட்ட வரும் ஆர்யா.. ஜிம் வொர்க் அவுட் வைரல் வீடியோ

Actor Arya Gym work out viral video: கோலிவுட்டில் சுமார் 20 வருடங்களாக தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் நடிகர் தான் ஆர்யா. இவருக்கு சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அந்த படத்திற்காக ஆர்யா தன்னுடைய உடலை ஏற்றி இறக்கி நிறையவே கஷ்டப்பட்டார்.

அதேபோன்று இப்போது மீண்டும் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் மிஸ்டர் எக்ஸ்(MrX) என்ற படத்தில் ஆர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காகவே தற்போது ஆர்யா கடும் உடற்பயிற்சி செய்து உடலை செம்ம பிட் ஆக மாற்றி இருக்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பார்ப்போரை பிரமிக்க வைத்துள்ளார்.

மேலும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் அறிமுக கட்சிக்கு தயாராகி விட்டதாகவும் நடிகர் ஆர்யா தற்போது அறிவித்திருக்கிறார். மிஸ்டர் எக்ஸ் படத்தை எஃப் ஐ ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். இந்த படத்தில் ஆர்யாவுடன் மஞ்சு வாரியர், கௌதம் கார்த்திக், அதுல்யா ரவி, அனகா, ரைசா வில்சன் உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.

Also Read: கோடீஸ்வர பெண்களை திருமணம் செய்த 5 பிரபலங்கள்…மார்க்கெட் இல்லன்னா கூட பொழச்சு பாண்டா இந்த விஷ்ணு

முரட்டுத்தனமான லுக்கிற்கு மாறிய ஆர்யா

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தாமஸ் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காகவே ஜிம்மில் டி-ஷர்ட்டை மேலே தூக்கிக்கொண்டு சிக்ஸ் பேக்ஸ் தெரியும் அளவுக்கு முரட்டுத்தனமாக ஆர்யா ஒர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் எல்லாம் தொடர்ந்து ப்ளாப் ஆனது. ஆனால் மிஸ்டர் எக்ஸ் படம் ஆர்யாவின் அடுத்த வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு பிறகு சார்பட்டா 2 படத்திலும் ஆர்யா நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

சிக்ஸ் பேக் உடன் மிரட்டும் ஆர்யா

arya-gym-work-out-cinemapettai
arya-gym-work-out-cinemapettai

Also Read: ஆர்யாவுக்கு அடித்த பெரிய ஜாக்பாட்.. இதுவும் ஒர்கவுட் ஆகலனா மொத்தமும் சோலி முடிஞ்சிடும்

Trending News