வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஆர்யாவுக்கு அடையாளம் கொடுத்த 5 படங்கள்.. உயிரை பணயம் வைத்து நடித்த படம்

நடிகர் ஆர்யா தன்னுடைய சிறந்த நடிப்பினால் கோலிவுட்டில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். ஆரம்ப காலத்தில் கதை தேர்வுகளில் கொஞ்சம் சொதப்பினாலும் அதன் பின்னர் சரியான கதைக்களத்துடன் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமானார். ஆர்யாவின் உடலமைப்பு மற்றும் பேச்சுத்திறமையும் கூட அவரின் அடையாளத்தை தமிழ் சினிமா ரசிகர்களிடையே தக்கவைத்து. ஆர்யாவின் சினிமா கேரியரில் இயக்குனர்கள் பாலா, ராஜேஷ், பா ரஞ்சித் மிக முக்கியமானவர்கள்.

மதராசபட்டினம்: சுதந்திரத்திற்கு முன்னான காலகட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் மதராசபட்டினம். தனுஷ் ஸ்டைலில் ஓரம் போ, வட்டாரம், பட்டியல் போன்ற கமெர்சியல் கதைகளில் நடித்து கொண்டிருந்த ஆர்யாவை மதராசபட்டினம் படத்தில் பரிதியாக பார்க்க ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. வீரம், சுதந்திரத்தின் மீதான தாகம், காதல் என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தியிருந்தார்.

Also Read: பாட்ஷா ரஜினியுடன் வெளிவந்த முத்தையாவின் முத்துராமலிங்கம் பட போஸ்டர்.. வெறிபிடித்த சிங்கம் போல இருக்கும் ஆர்யா

சர்பட்டா பரம்பரை: குத்துசண்டை வீரர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். வடசென்னையின் கலாச்சாரம், குத்துசண்டை கலையை பற்றி எதார்த்தமாக எடுத்துக்கூறிய திரைப்படம். 1970 களின் வடசென்னையை தத்ரூபமாக கண்முன் காட்டியிருந்தார் இயக்குனர் பா. ரஞ்சித். ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் சினிமா ரசிகர்களிடையே நல்ல நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.

ராஜா ராணி: இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்த ராஜா ராணி திரைப்படம், ஆர்யாவை கோலிவுட்டின் காதல் மன்னனாக மாற்றியது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் சினிமா கேரியரில் இது அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. நஸ்ரியாவுடனான இளமை ததும்பும் காதல், நயன்தாராவுடனான மனபக்குவமான காதல் என இரண்டிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா.

Also Read: தோல்விக்கு பின்னும் தலைகால் புரியாமல் ஆடும் ஆர்யா.. ஒரே படத்தை வச்சு எத்தனை வருஷம் ஓட்ட போறீங்க

நான் கடவுள்: எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ என்னும் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் நான் கடவுள். இந்த படத்தை இயக்குனர் பாலா இயக்கியிருந்தார். இந்த படத்திற்காக கிட்டதட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக தன்னையே வருத்திக் கொண்டார் நடிகர் ஆர்யா. இதுவரை எந்த கதாநாயகர்களும் ஏற்று நடிக்காத அகோரி கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருந்தார்.

பாஸ் என்கிற பாஸ்கரன்: நடிகர் ஆர்யாவுக்கு காமெடி ரூட் செட் ஆகும் என்பதை நிரூபித்த திரைப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன். இந்த படத்தினல் ஆர்யா-சந்தானம் காம்போவில் உருவான காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிக்கும்படியாக இருக்கும். இந்த படத்திற்கு பின்னர் ஆர்யா அடுத்தடுத்து நிறைய காமெடி படங்களில் நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

Also Read: சர்ச்சை நடிகராக மாறிய ஆர்யா.. பறிபோகும் பட வாய்ப்பு

Trending News