ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நடிகர் திலகம் சிவாஜி தட்டிக் கொடுத்து வளர்த்த பப்லு.. குழந்தை நட்சத்திரமாக நடித்த 5 படங்கள்

Actor Babloo prithiveeraj play child Artist in tamil films: சின்ன திரையில் நாடக கலைஞர்களால் பப்லு என அறியப்பட்ட பிருத்திவிராஜ் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். பின்பு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வானமே எல்லை படத்தில் 3 நடிகர்களில் ஒருவராக தோன்றினார்.

தமிழ், மலையாளம் என பிசியாக இருந்த பப்லு சின்னத்திரையில் பல நாடகங்களில் நடித்துள்ளார் மேலும் ஜோடி நம்பர் 1 கலந்து கொண்டு சிம்புவிடம் சண்டை போட்டதன் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பப்படும் கண்ணான கண்ணே சீரியலில் பாசமிகு தந்தையாக நடித்து வருகிறார்

சமூக வலைதளங்களில் ஆடல் பாடல் ரீல்ஸ் என எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பப்லுவின் சொந்த வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது. ஆட்டிசம் உள்ள தனது மகனை பராமரிப்பது பற்றி கண்ணீருடன் அவரே நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.  தற்போது ஷீத்தல் உடன் தொடர்பில் இருந்த அவர் என்ன காரணத்தினாலோ பிரிந்து,  ஏமாற்றப்பட்டதாக சோக கீதம் பாடிக்  கொண்டிருக்கிறார்.

Also Read: சினிமாவை விட சீரியலில் கொள்ள லாபம் பார்க்கும் 5 நட்சத்திரங்கள்.. 100 கார்களை மாற்றி கொடிகட்டி பறக்கும் பப்லு

சமீபத்தில் எளிமையான முறையில் பிறந்தநாளை கொண்டாடிய இவர் வயது முதிர்ந்தாலும்  உடலை கட்டுக்கோப்பாக வைத்து இளமையாக  தோன்றுகிறார்.  இளசுகளின் கிண்டல் கேலிகளுக்கு அஞ்சாத பப்லு ஆரம்ப காலங்களில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜிஆர் படங்களில் நடித்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒன்று.

எம்ஜிஆர் நடித்து 1975 இல் வெளிவந்த ” நாளை நமதே” படத்தில் வரும் மூன்று குழந்தைகளில் சின்ன வயது எம்ஜிஆர் ஆக நடித்திருந்தார். ஓர் வழி வந்து நேர்வழி போவோம் நாளை நமதே என்ற கிளாசிக் பாடலில் வருவது பப்லுதான்.

சிவாஜி கணேசன், ரஜினி நடித்த நான் வாழவைப்பேன் படத்தில் சிவாஜியின் சகோதரராக பிரித்விராஜ் நடித்தார் “எந்தன் பொன் வண்ணமே நெஞ்சில் பூ வண்ணமே” என்று வரும் கிளாசிக் பாடலில் தாய்க்கு ஆறுதல் சொல்லும் தனயனாக பப்லு நடித்திருந்தார்.  மேலும் சிவாஜியுடன் நீதி, டாக்டர் சிவா, பாரத விலாஸ் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக பப்லு நடித்து சிவாஜி பாராட்டை பெற்றுள்ளார்.

Also Read: பப்லுவின் பிரிவிற்கு இதுதான் முக்கிய காரணம்.. தடையாக இருந்த ஷீத்தல்

Trending News