புதன்கிழமை, ஜனவரி 15, 2025

800 படங்களுக்கு மேல் அசத்திய சார்லியின் சிறந்த 6 கேரக்டர்கள்.. இன்றுவரை மறக்க முடியாத நேசமணியின் கோவாலு!

நடிகர் சார்லி,  இயக்குனர் இமயம் பாலச்சந்தர் அவர்களால் பொய்க்கால் குதிரை என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படத்திலேயே காமெடி கேரக்டரில் நடித்ததால் தொடர்ந்து இவருக்கு காமெடியனாக நடிக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது. இருந்தாலும் அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சார்லியின் குறிப்பிட்ட ஒரு சில கேரக்டர்கள் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.

பிரண்ட்ஸ்: இயக்குனர் சித்திக் இயக்கத்தில் தளபதி விஜய், சூர்யா இணைந்து நடித்த திரைப்படம் பிரண்ட்ஸ். இதில் வடிவேலு மற்றும் சார்லி காம்போவில் அத்தனை காட்சிகளும் இன்றுவரை ரசிக்கும்படி அமைந்திருக்கும். தலையில் அடிபட்டு எல்லாவற்றையும் மறந்த கோவாலு, தன்னுடைய முதலாளி நேசமணியை படுத்தும் பாடு பயங்கர காமெடியாக இருக்கும்.

Also Read: நடிகர் சார்லி நீங்கள் அறிந்த, அறிந்திடாத சுவாரசியமான தகவல்கள்

வெற்றிக் கொடிகட்டு: முரளி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்த திரைப்படம் வெற்றிக் கொடிகட்டு. பணத்தை ஏமாந்த பழனியாக பார்த்திபனை பார்த்து புலம்பும் சமயத்தில் மனோரமா இருப்பதை புரிந்து கொண்டு, சட்டென நான் ஒரு இளவரசன் என தொடங்கும் வசனத்தை பைத்தியம் போல் பேசுவார். இந்த கேரக்டரை அந்தப் படத்தில் மறக்க முடியாது.

உன்னை நினைத்து: நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் உன்னை நினைத்து. இந்தப் படத்தில் போலி ஜோசியராக மெய் மெய்யப்பன் எனும் கேரக்டரில் சார்லி நகைச்சுவையில் கலக்கி இருப்பார். சிங்கமுத்துவுக்கும், இவருக்குமான காமெடி காட்சி ரசிக்கும் படி அமைந்திருந்தது.

Also Read: காமெடியன் வில்லன் அவதாரம் எடுத்து வெற்றி கண்ட 8 ஹீரோக்கள்.. அரசியல்வாதியாக மிரட்டி விட்ட கவுண்டமணி

உடன்பால்: சார்லி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் உடன்பால். பொருளாதார கஷ்டத்தால் சொந்த வீட்டை விற்க நினைக்கும் பிள்ளைகளை சமாளிக்கும் தந்தை விநாயகமாக இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் மெய்சிலிர்க்க வைத்திருப்பார்.

பூவே உனக்காக: இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படம் பூவே உனக்காக. இந்த படத்தில் சார்லி விஜய்யின் நண்பனாக படம் முழுக்க சிரிக்க வைத்திருப்பார். தபால் பெட்டியில் இவர் கை சிக்கிக் கொள்ளும் காட்சி, விஜய்க்கு வரும் கடிதத்தை படிக்கும் காட்சி என வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார்.

சிகரம்: மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைத்து ஹீரோவாக நடித்த திரைப்படம் சிகரம். இந்த படத்தில் சார்லி குணச்சித்திர கதாபாத்திரமாக ஒரு சில காட்சிகளில் வந்திருந்தாலும் மனதில் நிற்கும் படி நடித்திருப்பார்.

Also Read: வடிவேலுவை அப்பவே சோலி முடிச்சிருப்பேன்.. எனக்கு மூணு பொம்பள புள்ளைங்க, கடுமையாக விமர்சித்த நடிகர்

Trending News